“சட்டவிரோத குடியேறிகளுக்கு வேலை பெர்மிட்” – வெளிப்படத்தைத்தன்மை வேண்டும்.!

Work Permit Malaysia
Image tweeted by AJplus

ஆண்டின் தொடக்கத்தில் இருந்து மலேசிய அரசு மற்றும் குடிநுழைவுத்துறை உரிய ஆவணங்கள் இன்றி மலேசியாவில் தங்கியுள்ள பிற நாடுகளை சேர்ந்த தொழிலார்களை கைது செய்து வருகின்றனர். (Work Permit Malaysia)

மஸ்ஜித் இந்தியாவில் தொடங்கி பல இடங்களில் இந்த சோதனை நடைபெற்றது. (Work Permit Malaysia) அதே சமயம் உரிய ஆவணங்கள் இல்லாத பல நூறு வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

“வெளிநாட்டு தொழிலாளர்களை அனுமதிக்க வேண்டும்”

இந்நிலையில் அந்த சட்டவிரோத குடியேறிகளுக்கு வேலைக்கான பெர்மிட் வழங்குவது குறித்து தற்போது மலேசிய அரசு ஆலோசனை செய்து வருகின்றது என்ற தகவல் வெளியானது.

தற்போது உலகம் முழுக்க நிலவும் இக்கட்டான சூழலால் பிற நாடுகளை போல மலேசிய பொருளாதாரமும் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக செம்பனை மற்றும் ரப்பர் தோட்டம் ஆகிய இடங்களில் வேலையாட்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையை சரிசெய்ய கள்ளக்குடியேறிகளை பயன்படுத்த தெரிவித்துள்ளது அரசு யோசித்து வருகின்றது.

கள்ளக்குடியேறிகளாக மலேசியா வந்தவர்களுக்கு தற்காலிக வேலை பெர்மிட் வழங்கி அவர்களை தேவையான இடங்களில் பணியமர்த்த ஆலயசனை நடந்து வருகின்றது.

இந்த தகவலை பிரதமர் முஹிடின் யாசின் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார். இருப்பினும் இந்த விஷயத்தில் குளறுபடி ஏதும் இருக்க கூடாது என்று தெனாகானித்தா என்னும் அரசு சாரதா நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.

இந்த நிகழ்வில் இடைத்தரகர்கள் இருக்கக்கூடாது என்றும். இதற்கான விளம்பரங்கள் அந்த அந்த பணியாளர்களின் மொழியில் இருக்க வேண்டும் என்றும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

மலேசிய செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…

 Facebook

Telegram