4லட்சத்து 80 ஆயிரம் பேருக்கு இரண்டாம் டோஸ் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது – ஆதம் பாபா

Second Dose Vaccine
Photo Courtesy BERNAMA

இதுவரை மலேசியாவில் 7,71,829 பேருக்கு முதல்கட்ட தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்று சுகாதார துறை அமைச்சர் ஆதம் பாபா தெரிவித்துள்ளார். (Second Dose Vaccine)

மேலும் ஏப்ரல் மாதம் தொடங்கி ஆகஸ்ட் மாதம் வரை இரண்டாம்கட்ட கொரோனா தடுப்பூசி வழங்கும் பணி தொடர்ந்து நடக்கும் என்றும் அவர் தெரிவித்தார். (Second Dose Vaccine)

அந்நியநாடு தொழிலாளர்களுக்கு திறன்பயிற்சி அளிக்கப்படுகிறதா? – பி. ராமசாமி

அதிகபட்சமாக சிலாங்கூர் பகுதியியல் 2,400,317 பேருக்கு காரோண தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. சபா பகுதியில் 4,44,926 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது.

மேலும் இரண்டாம் டோஸ் கொரோனா தடுப்பூசி போடும் பணி சரவாக் மாநிலத்தில் இருந்து சில வாரங்களுக்கு முன்பு தொடங்கியது குறிப்பிடத்தக்கது.

சரவாக் பகுதியில் இதுவரை 8,52,937 பேருக்கு முதல் டோஸ் தடுப்பு மருந்தும் 6000-க்கும் அதிகமானோருக்கு இரண்டாம் டோஸ் மருந்தும் அளிக்கப்பட்டுள்ளது.

அதனை தொடர்ந்து ஏப்ரல் மாதம் தொடங்கி ஆகஸ்ட் மாதம் வரை, அதிக அளவில் ஆபத்தில் உள்ள 9 மில்லியன் மக்களுக்கு தடுப்பூசி வழங்கப்படும்.

அதன் பிறகு மூன்றாம் மற்றும் இறுதிக்கட்டமாக 18 வயது நிரம்பிய 16 மில்லியன் மக்களுக்கு அடுத்த ஆண்டு பிப்ரவரி வரை இந்த தடுப்பூசி வழங்கு பணி நடைபெறும்.

தீவிரமாக மலேசியாவில் பரவி வந்த கொரோனா, அதன் மூன்றாம் அலைக்கு பிறகு சற்று குறைவான அளவில் பரவி வருகின்றது.

ஆனால் அண்டை நாடான இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.