அந்நியநாடு தொழிலாளர்களுக்கு திறன்பயிற்சி அளிக்கப்படுகிறதா? – பி. ராமசாமி

Skill development training
Image Courtesy makkalosai.com.my

மலேசியாவில் அந்நிய நாட்டு தொழிலாளர்களுக்கு முறையான திறன் மேம்பாடு பயிற்சி அளிக்கப்படுகிறதா என்று பினாங்கு துணை முதல்வர் கேள்வி எழுப்பியுள்ளார். (Skill development training)

வெளிநாட்டு ஊழியர்களுக்கு நாட்டில் உரிய பாதுகாப்பு வழங்க போதுமான சட்டங்கள் உள்ளது என்று மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ M. சரவணன் கூறினார். (Skill development training)

மாநிலங்களுக்கு இடையேயான பயணம் – அதிகரிக்கும் கட்டுப்பாடுகள்

இந்நிலையில் அவர் கூறிய அந்த கருத்துக்கு கேள்வி எழுப்பும் வகையில் துணை முதல்வர் ராமசாமி அந்த கேள்வியை சரவணனிடம் முன்வைத்துள்ளார்.

மலேசியாவில் உண்மையில் வெளிநாட்டு தொழிலாளர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் என்னவென்பதை அமைச்சர் அறிந்திருக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

திறன் பயிற்சி மேற்கொள்ளாமல் முறையான செயல்பாட்டினை அளிக்க முடியாமல் வெளிநாட்டு தொழிலாளர்கள் சிரமப்படுவதாகவும் அவர் கூறினார்.

அப்படி நடக்கும் பட்சத்தில் அது அவர்கள் வேலை செய்யும் தொழிலாளியும், அந்த தொழில் சார்ந்த முதலாளிகளையும் பாதிக்கும் என்று ராமசாமி தெரிவித்தார்.

ஆகையால் வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு முறையான திறன் பயிற்சியினை முழுமையாக அளிக்க ஆவணம் செய்யவேண்டும் என்றார் அவர்.

மலேசியாவில் சுமார் 11 லட்சத்திற்கும் அதிகமான ஆவணம்படுத்தப்பட்ட வெளிநாட்டு தொழிலாளர்கள் இருக்கின்றனர்.

ஆனால் அதேசமயம் அதற்கு இணையாக மலேசியாவில் ஆவணம்படுத்தப்படாத வெளிநாட்டு தொழிலாளர்களும் உள்ளனர் என்று நம்பப்படுவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

இதனால் உள்ளுர் தொழிலாளர்களின் சம்பளத்தை குறைக்க சில முதலாளிகள் அந்த ஆவணம்படுத்தப்படாத தொழிலாளர்களை பயன்படுத்துவதாகவும் கூறப்படுகிறது.

ஆகையால் அனைத்தும் ஆவணம்படுத்தப்பட்டு தொழிலாளர்களுக்கு முறையான திறன்பயிற்சி அளிக்கப்படவேண்டும் என்று துணை முதல்வர் கூறினார்.

மலேசிய செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

 Facebook

Telegram