மலேசியாவில் தடுப்பூசி வழங்கும் பணி தீவிரமாக நடந்து வருகின்றது – நூர் ஹிஷாம் அப்துல்லா

Corona Vaccine Doses
Image Tweeted by BERNAMA

மலேசியாவில் கொரோனா தொற்றின் அளவு அடிக்கடி ஏற்ற இரக்கத்தை கண்டு வருகின்றது. இந்நிலையில் 1.5 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் இரண்டு டோஸ் தடுப்பூசி பெற்றுள்ளனர். (Corona Vaccine Doses)

4,73,276 பேர் இதுவரை முதற்கட்ட தடுப்பூசி எடுத்துக்கொண்டுள்ளனர் என்று சுகாதார அமைச்சுக இயக்குனர் ஜெனரல் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். (Corona Vaccine Doses)

ஏப்ரல் 19 முதல் அடுத்தகட்ட தடுப்பூசி போடும்பணி தொடக்கம்? – அமைச்சர் ஜமாலுதீன்.!

மேலும் மலேசியாவில் 1,88,385 பேர் இரண்டு டோஸ் தடுப்பு மருந்துகளையும் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கொரோனா தடுப்பூசி வழங்கும் முதற்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் மிகவும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

கெடா பகுதியில் 28,209 பேருக்கு முதல் கட்ட ஊசியும் 11,139 பேருக்கு இரண்டுக்கட்ட தடுப்பூசியும் அளிக்கப்பட்டுள்ளது.

தலைநகர் கோலாலம்பூரில் 44,110 பேருக்கு முதல் கட்ட ஊசியும் 15,520 பேருக்கு இரண்டுக்கட்ட தடுப்பூசியும் அளிக்கப்பட்டுள்ளது.

ஜோகூர் பகுதியில் 36,992 பேருக்கு முதல் கட்ட ஊசியும் 15,036 பேருக்கு இரண்டுக்கட்ட தடுப்பூசியும் அளிக்கப்பட்டுள்ளது.

மலேசியாவில் சரவாக் அதிகபட்சமாக 39,970 பேர் முதற்கட்ட தடுப்பூசி பெற்ற நிலையில் அதில் 24,535 பேருக்கு இரண்டாம்கட்ட தடுப்பூசியும் போடப்பட்டுள்ளது.

அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்திற்குள்ளாக மலேசியாவில் 80 சதவிகிதம் பேருக்கு முழுமையாக கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது.

மலேசிய செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

 Facebook

Telegram