“வெளிநாட்டு தொழிலாளர்களை அனுமதிக்க வேண்டும்” – செம்பனை எண்ணெய் சங்கம்.!

Foreign Workers
Picture Courtesy AsiaNews

செம்பனை மற்றும் அனைத்து தோட்ட (Foreign Workers) தொழில்களிலும் வெளிநாட்டு தொழிலாளர்களை நாட்டிற்குள்ள வர அனுமதிக்க வேண்டும் என்று சில சங்கங்கள் கோரிக்கை வைத்துள்ளன.

இந்த கொரோனா ஊரடங்கினாள் விடுமுறையில் தாயகம் திரும்பிய (Foreign Workers) வெளிநாட்டு தொழிலார்களை மீண்டும் மலேசியா வர அரசு அனுமதிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

மலேசியாவில் தேர்தல் வேண்டாம்.?

தற்போது மலேசியாவில் சட்டவிரோதமாக குறியேறியவர்களை தோட்ட தொழிலில் தற்காலிகமாக வேளைக்கு அமர்த்த அரசு பரிசீலித்து வருவது வரவேற்கத்தக்கது.

இருப்பினும் வெளிநாட்டு தொழிலாளர்களை அனுமதிக்க வேண்டும் என்று செம்பனை எண்ணெய் சங்கத்தின் தலைவர் டத்தோ நாகிப் வஹாப் கூறியுள்ளார்.

தோட்ட தொழில் பிறநாட்டு தொழிலாளர்களை முடக்க நினைப்பதை அரசு கைவிட வேண்டும் என்றும் அவர் கூறினார்.

இந்த கொரோனா காலத்தில் வேலை இழந்து தவிக்கும் மலேசியர்களுக்கு உள்ளுர் நிறுவனங்கள் வேலை அளிப்பதை உறுதி செய்ய வேண்டும்.

இந்த ஆண்டு இறுதி வரை வெளிநாட்டு தொழிலார்களை மலேசியாவிற்குள் அனுமதிக்க கூடாது என்ற புதிய முடிவினை அரசு அண்மையில் எடுத்து அனைவரும் அறிந்ததே.

இருப்பினும் தோட்ட தொழிலில் விடுமுறைக்கு தாயகம் திரும்பிய தொழிலாளர்களை மீண்டும் மலேசியா வர அரசு பரிசீலனை செய்திட வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த நிலையில் இந்த செம்பனைத் தோட்டவேளைகளில் ஈடுபட பூர்வீக மலேசியர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார் அமைச்சர் முகமத் கைருதீன் அமான் ராஸாலி அவர்கள். Foreign Workers

முன்பை விட செம்பனை பழங்களின் கொத்துக்கள் தற்போது அதிக அளவில் விலைக்கு விற்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.

ஆதலால் இந்த தொழில் வெளிநாட்டு ஊழியர்களையே நம்பி இருக்காமல் உள்ளூர் தொழிலாளர்களை வேளைக்கு எடுக்க முடியும் என்றும் அமைச்சர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மலேசிய செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…

 Facebook

Telegram