Face Mask : மலேசியாவில் முகக்கவசம் அணிவது குறித்து புதிய அறிக்கை வெளியீடு – மூத்த அமைச்சர் இஸ்மாயில்

Ismayil Sabri yakob
Photo Courtesy : malaysia.news.yahoo.com

மலேசியா கோவிட் 19 தொற்று காரணமாக இதுவரை 125 உயிர்களை பறிகொடுத்துள்ளது. சரியாக 9002 பேர் இந்த நோயின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் 18ம் தேதி முதல் பொது நடமாட்டக் கட்டுப்பாடு அமலில் உள்ளது. கடந்த மே மாத தொடக்கத்தில் மலேசியாவில் தொற்று மிக குறைவாக உள்ள இடங்களில் பொருளாதார துறைகள் துவங்க அரசு அனுமதி வழங்கியது. நேற்று மலேசியாவில் ஒரே ஒரே உள்ளூர் தொற்று ஏற்பட்டது, மேலும் தீவிர சிகிச்சை பிரிவில் யாருமே சிகிச்சை பெறவில்லை என்ற தகவலையும் சுகாதார அமைச்சகம் தெரிவித்தது.

மேலும் மலேசியாவில் தற்போது மெல்ல இயல்பு நிலை திரும்புவதால் மலேசியாவில் மீட்சிக்கான கட்டுப்படும் அமலில் வந்துள்ளது. இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு மலேசியாவில் முகக்கவசம் இன்றி பேரங்காடிகளுக்கு வரும் மக்களை சில அங்காடிகளில் அனுமதிப்பதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. அப்போது மலேசிய அமைச்சர் இஸ்மாயில் சப்ரி மலேசியாவில் முகக்கவசம் அணிவது கட்டாயம் அல்ல என்றும், பேரங்காடிகள் வாடிக்கையாளர்கள் முகக்கவசம் அணிய கட்டாயப்படுத்த வேண்டாம் என்றும் கூறியுள்ளார்.

இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் தேதி முதல் மக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும், மேலும் அவ்வாறு அணியாத மக்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மூத்த அமைச்சர் இஸ்மாயில் சபரி தெரிவித்தார். மேலும் முகக்கவசம் அணியாமல் வந்தவர்களுக்கு தண்டனை கொடுக்கும் வகையில் 1000 ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டதாக தகவல் வெளியானது. இந்நிலையில் இந்த முகக்கவசம் அணிவது குறித்து மக்கள் சிலர் அதிருப்தி தெரிவித்த நிலையில் மூத்த அமைச்சர் இஸ்மாயில் புதிய விதி ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Pemakaian pelitup muka atau face mask hanya diwajibkan di dalam pengangkutan awam dan bukan kenderaan persendirian.

Pemakaian pelitup muka atau face mask hanya diwajibkan di dalam pengangkutan awam dan bukan kenderaan persendirian.Wajib di tempat awam yang bersesak dan tidak ada penjarakan sosial.Jika tempatnya luas dan boleh diadakan penjarakan sosial maka tidak diwajibkan.Bayi berumur 2 tahun ke bawah juga tidak diwajibkan memakai mask.Walau bagaimanapun untuk lain-lain DIGALAKKAN memakai pelitup muka setiap kali berada di luar rumah. Bagi kanak-kanak 12 tahun ke bawah TIDAK DIGALAKKAN dibawa di kawasan awam.

Posted by Ismail Sabri Yaakob on Tuesday, August 4, 2020

அந்த பதிவில் “Face mask அணிவது பொது போக்குவரத்தில் மட்டுமே கட்டாயமாகும், தனியார் வாகனங்களில் பணிக்கும்போது அல்ல. மேலும் நெரிசலான பொது இடங்களில் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும் தனித்து இருக்கும் இடங்களில் அணிய தேவை இல்லை என்று தெரிவித்தார். விசாலமாக போதிய இடைவெயில் இருக்கும் இடத்திலும் பயன்படுத்த தேவை இல்லை என்றும் அவர் தெரிவித்தார், மேலும் குழந்தைகளுக்கு முகமூடி அணிய தேவையில்லை என்றும் குறிப்பிட்டார்.

மலேசிய செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…

 

?? Facebook – https://www.facebook.com/tamilmicsetmalaysia/

?? Twitter      – https://twitter.com/malaysiatms