மலேசியா – ‘மஸ்ஜித் இந்தியா உள்ளிட்ட இடங்களில் அதிகாரிகள் அதிரடி சோதனை’ – காரணம் என்ன..?

masjid india

நேற்று மலேசியாவின் கோலாலம்பூரில் உள்ள மஸ்ஜித் இந்தியா என்ற இடம் உற்பட பல இடங்களில் 300க்கும் மேற்பட்ட சட்ட அமலாக்க அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர். இந்த பகுதிகள் அனைத்தும் தீவிர நடமாட்டக் கட்டுப்பாடு பிறப்பிக்கப்பட்டுள்ள பகுதிகள் என்பது குறிப்பிடத்தக்கது. மலேசிய நாட்டை தவிர பிற நாடுகளில் இருந்து முறையான மற்றும் தேவையான ஆவணங்கள் இன்றி தங்கியிருப்பவர்களை கண்டுபிடிப்பதறகாக இந்த சோதனை நடத்தப்பட்டதாக தகவல்கள் தெரியவிக்கின்றன.

நேற்று காலை சுமார் 8.30 மணிக்கு மேல் இந்த சோதனையானது நடக்க தொடங்கியுள்ளது. இந்த சோதனையில் மலேசியாவின் குடிவரவுத்துறை, மலேசியாவின் ஆயுதப்படை போலீசார், சுகாதார அமைச்சகம், காவல்துறை, மற்றும் பொது பாதுகாப்பு படை வீரர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் பலர் இந்த சோதனையில் ஈடுபட்டனர்.

மலையன் மேன்ஷன், Plaza City one மற்றும் அந்த பகுதியில் உள்ள பல கட்டிடங்களில் தீவிர சோதனை நடத்தப்பட்டது. அங்குள்ள கட்டிடங்களில் அதிகாரிகள் வீடு வீடாக சென்று சோதனை நடத்தியுள்ளனர். இந்த சோதனையின்போது சரியான ஆவணங்கள் இல்லாத பலரை கட்டிடங்களில் இருந்து கீழே இறக்கி அவர்கள் அனைவரையும் லாரிகளில் ஏற்றிச்சென்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.