தற்போது உலக முழுக்க நிலவும் இக்கட்டான சூழல் காரணமாக தாயகம் செல்லமுடியாமல் தவித்து வரும் மக்களை சிறப்பு விமானங்கள் மூலம் தாயகம் அழைத்து சென்று கொண்டிருக்கிறது இந்திய அரசு. இந்நிலையில் ஏற்கனவே கடந்த சில மாதங்களாக வந்தே பாரத் திட்டத்தின் கீழ் ஏர் ஆசியா விமானங்களை இயக்கி 500-க்கும் அதிகமான இந்தியர்கள் மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து இந்தியாவின் கொச்சி, டெல்லி, சென்னை, திருச்சி, கோவை மற்றும் பெங்களூரூ ஆகிய இடங்களுக்கு சென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Indian nationals stranded in Malaysia since March'20 take @airindiain ✈ IX 1625 to Trichy today. @hcikl officials assist them at the Kuala Lumpur Int Airport. @MEAIndia @DoC_GoI @IndianDiplomacy pic.twitter.com/h5UHTnp0pP
— India in Malaysia (@hcikl) August 4, 2020
இந்நிலையில் மலேசியாவில் செயல்படும் இந்திய high commission வந்தே பாரத் திட்டத்தின் கீழ் செயல்பட உள்ள அடுத்த கட்ட (மலேசியாவில் இருந்து இந்தியாவிற்கு) விமான சேவை குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை அண்மையில் வெளியிட்டது. இதில் ஆகஸ்ட் மாதம் 3ம் தேதி முதல் 13ம் தேதி வரை கோலாலம்பூரில் இருந்து இந்தியாவின் பல பகுதிகளுக்கு மற்றும் அதற்கான டிக்கெட் பெரும் முறைகள் மற்றும் தொலைபேசி எண்களை ஏற்கனவே வழங்கியது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நேற்று மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து இந்த மாதத்தின் முதல் விமானம் திருச்சி வந்தடைந்தது. இதுகுறித்து தகவல் தெரிவித்துள்ள இந்திய உயர் கமிஷன் கடந்த மார்ச் மாதம் 20ம் தேதி முதல் இந்த சிறப்பி விமான சேவை நடந்து வருவதாக தெரிவித்தது.
மலேசிய செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…
?? Facebook – https://www.facebook.com/tamilmicsetmalaysia/
?? Twitter – https://twitter.com/malaysiatms