‘வந்தே பாரத் Phase 4’ – வெளியானது மலேசியாவில் இருந்து தமிழகம் செல்லும் விமானங்களின் பட்டியல்..!!

malaysia immigration
Image Tweeted by India in Malaysia

தற்போது உலக முழுக்க நிலவும் இக்கட்டான சூழல் காரணமாக தாயகம் செல்லமுடியாமல் தவித்து வரும் மக்களை சிறப்பு விமானங்கள் மூலம் தாயகம் அழைத்து சென்று கொண்டிருக்கிறது இந்திய அரசு. இந்நிலையில் ஏற்கனவே சில விமானங்களில் 300-க்கும் அதிகமான இந்தியர்கள் மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து இந்தியாவின் கொச்சி மற்றும் திருச்சி ஆகிய இடங்களுக்கு சென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் மலேசியாவில் செயல்படும் இந்தியாவின் High கமிஷன் வந்தே பாரத் திட்டத்தின் கீழ் செயல்பட உள்ள அடுத்த கட்ட (வந்தே பாரத் – 4) (மலேசியாவில் இருந்து இந்தியாவிற்கு) விமான சேவை குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த மாத தொடக்கத்தில் இருந்தே மலேசியாவின் கோலாலம்பூரில் இருந்து இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கு விமானங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

தற்போது மலேசியாவில் செயல்படும் இந்தியாவின் High கமிஷன் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் வரும் 21ம் தேதி முதல் இம்மாத இறுதி வரை தமிழகம் மற்றும் இந்தியன் பிற பகுதிகளுக்கு (வந்தே பாரத் திட்டத்தின் கீழ்) செல்லும் விமானங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.