மாநிலங்களுக்கு இடையேயான பயணம் – அதிகரிக்கும் கட்டுப்பாடுகள்

Travel Restriction
Photo Courtesy tamilmalar.com.my

மாநிலங்களுக்கு இடையேயான பயணக்கட்டுப்பாட்டை மென்மேலும் கடுமையாக்க திட்டம் வகுக்கப்படும் என்று மலேசிய காவல் படையின் துணை தலைவர் டத்தோஸ் அக்ரில் சானி அப்துல்லா தெரிவித்துள்ளார். (Restriction for Travel)

சில மாதங்களுக்கு முன்பு மலேசியாவில் கொரோனா தொற்றே பதிவாகாமல் இரண்டு நாட்கள் கழிந்தது. கொரோனா தொற்று மலேசியாவை விட்டு அகன்றுவிட்டது என்று பலரும் மகிழ்ச்சியோடு இருந்த நேரத்தில் கொரோனாவின் அடுத்த அலை மலேசியாவில் பரவத்தொடங்கியது. (Restriction for Travel)

மலேசியா உலகின் குப்பைதொட்டியல்ல – சுற்றுச்சூழல் மற்றும் நீர் அமைச்சகம்.!

இந்நிலையில் இந்து மதியம் 12 மணி நிலாரவப்படி மலேசியாவில் புதியதாக 2341 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது என்று சுகாதார அமைச்சுக இயக்குனர் ஜெனரல் கூறியுள்ளார்.

1592 பேர் குணமடைந்துள்ள நிலையில் இதுவரை மலேசியாவில் கொரோனா பாதித்த 94 விழுக்காடு மக்கள் நலம்பெற்றுள்ளனர்.

மேலும் மலேசியாவில் இன்று கொரோனாவிற்கு மூவர் பலியான நிலையில் கொரோனாவால் இதுவரை மலேசியாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1389ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில் தொற்றின் அளவை குறைக்க மலேசியாவில் மாநிலங்களுக்கு இடையேயான பயணக்கட்டுப்பாட்டை மிகவும் கடுமையாக்க முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மருத்துவம், திருமணம் மற்றும் இறப்பு சார்ந்த விஷயங்களுக்கு மட்டுமே மாநிலம் தாண்டி பயணிக்க அனுமதி அளிக்கப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது.

மேலும் பயணத்திற்கு உரிய ஆவணங்களை சமர்ப்பித்து அனுமதி பெற்றவர்கள் மட்டுமே மாநிலம் கடந்த பயணத்திற்கு அனுமதிக்கப்படுவர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மக்கள் சற்று கவனத்துடன் செயல்பட்டால் மட்டுமே தொற்றின் அளவை குறைத்து கொரோனாவில் இருந்து மலேசியாவை மீளச்செய்யமுடியும்.

மலேசிய செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

 Facebook

Telegram