மலேசியா உலகின் குப்பைத்தொட்டி அல்ல என்று மலேசிய சுற்றுச்சூழல் மற்றும் நீர் அமைச்சகம் (காசா) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார். (Plastic Waste Container)
அமெரிக்காவில் இருந்து நெகிழி குப்பைகளோடு உள்ள கொள்கலன்களை கொண்ட நாட்டிற்குள் நுழைந்ததையடுத்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. (Plastic Waste Container)
மலேசியாவில் தடுப்பூசி வழங்கும் பணி தீவிரமாக நடந்து வருகின்றது – நூர் ஹிஷாம் அப்துல்லா
மலேசியா விதித்த விதிகளை பின்பற்றாமல் நாட்டிற்குள்கொண்டுவரப்படும் எல்லாவித கழிவுகளும் மீண்டும் அந்த நாட்டிற்கே திரும்ப அனுப்பப்படும்.
அதேநேரம் மறுசுழற்சி பணிக்காக கொடுவரப்படும் நெகிழி மற்றும் அது தொடர்பான குப்பைகள் மலேசியாவிக்குள் அனுமதிக்கப்படும்.
வளரும் நாடுகளில் பெரிய அளவில் உள்ள சிக்கல்களாக பார்க்கப்படும் விஷயங்களில் இந்த நெகிழி குப்பைகளும் ஒன்று.
பிற நாடுகளின் குப்பைகளை கொட்டும் இடமாக பல சிறிய நாடுகள் மாறிவருவதை நம்மால் பார்க்கமுடிகிறது.
இந்நிலையில் மலேசியாவிற்குள் வரும் நெகிழிகள் கொண்ட கொள்கலன்கள் தீவிர சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சுற்றுசூழல் மற்றும் நீர் மேலாண்மை அமைப்பான சாகா அதற்கு பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த விவகாரத்தில் அமைச்சர் துவான் இப்ராஹிம் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் இணைந்து கிள்ளான் துறைமுகத்தில் ஆய்வு செய்ததாக கூறினார்.
மலேசிய செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.
* Telegram