“இனி ஹோட்டலில் இருந்து வேலைப்பார்களாம்” – புதுமுயற்சியில் ஹோட்டல்கள்.!

Work from home
Image tweeted by Gayatravel

மலேசியாவில் தற்போது பல இடங்களில் மீண்டும் இயக்கக்கட்டுப்பாடு அமலில் வந்துள்ளது. இதனால் ஒர்க் from ஹோம் கலாச்சாரத்தை போல ஒர்க் from ஹோட்டல் கலாச்சாரம் தொடங்கியுள்ளது. (Work From Home)

தற்போது மலேசியாவில் கிள்ளான் பள்ளத்தாக்கில் வசிக்கும் மக்கள் மாநிலம் கடந்த, மற்றும் உள்நாட்டு பயணம் செய்ய முடியாமல் உள்ளனர். (Work From Home)

இதனால் அங்குள்ள ஹோட்டல்களும் பெரிய அளவில் வாடிக்கையாளர்கள் இன்றி தவித்து வருகின்றன. இதனை தொடர்ந்து அங்கு Work from Hotel என்ற கலாச்சாரம் தொடங்கியுள்ளது.

“சட்டவிரோத குடியேறிகளுக்கு வேலை பெர்மிட்”

பினாங்கு, சிலாங்கூர், மலாக்கா மற்றும் கிள்ளான் போன்ற பகுதிகளில் உள்ள ஹோட்டல்கள் போதிய வருமானம் இன்றி தவிப்பதால் இந்த புதிய முயற்சியை மேற்கொண்டு வருகின்றனர்.

அதற்கு ஏற்ப தற்போது பினாங்கு, சிலாங்கூர், மலாக்கா மற்றும் கிள்ளான் போன்ற பகுதிகளில் உள்ள ஹோட்டல்கள் தங்களுடைய வளாகங்களில் இதற்கு ஏற்ப ஏற்பாடுகள் செய்து வருகின்றனர்.

அதே சமயம் ஊழியர்கள் ஹோட்டல்களில் தங்கி வேலை பார்ப்பதற்கு உண்டான செலவினை அந்த அந்த நிறுவனங்கள் ஏற்கும் பட்சத்தில் மட்டுமே இந்த முடிவு சாத்தியமாகும் என்றும் ஹோட்டல் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பல மாதங்களாக வீட்டில் இருந்து வேலை செய்துவரும் ஊழியர்களுக்கு இது ஒரு மாறுதலாக இருக்கும் என்று கருத்துக்கள் வெளியாகி வருகின்றது.

இருப்பினும் ஹோட்டல் போன்ற பகுதிகளில் வேலை செய்ய சிலர் விரும்பம் தெரிவிப்பதில்லை என்ற கருத்தும் நிலவி வருகின்றது.

மலேசிய செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…

 Facebook

Telegram