“கட்டுப்பாடு மீறல் : ஒரே நிகழ்ச்சியில் கலந்துகொண்ட 32 பேர் கைது..?” – பாதுகாப்பு அமைச்சர்..!

PKPP in Perak
Picture Courtesy Astro Awani

மார்ச் மாதம் தொடங்கிய ஊரடங்கு தற்போது மலேசியாவில் தளர்வு அடைந்துள்ளது. கடந்த மே மாதம் தொடங்கி பொருளாதார துறைகள் திறக்கப்பட்டு வணிகம் நடைபெற்று வருகின்றது. மேலும் கடந்த ஜூலை மாதம் 15ம் தேதி முதல் ஐந்து மற்றும் ஆறாம் படிவம் பயிலும் மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு பள்ளிகள் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது. உள்ளூர் தொற்று தினமும் புதிதாக உருவாகி வந்தாலும் தற்போது மலேசியாவில் நோய் தொற்று ஓரளவு கட்டுப்பாட்டில் தான் உள்ளது.

இதையும் படிங்க : “குடிநுழைவு மையத்தில் சிக்கியிருந்த 142 இந்தியர்கள்” – பத்திரமாக சென்னை திரும்பினார்..!

இந்நிலையில் மீட்சிக்கான நடமாட்டக் கட்டுப்பாடு அமலில் உள்ள நிலையில் அந்த கட்டுப்பாட்டை மீறியதாக சுமார் 88 பேரை கைது செய்துள்ளனர் மலேசிய போலீசார். இந்த 88 பேரில் 32 பேர் ஒரே நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு திரும்பியபோது கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் கைதான 88 பேரில் 84 பேர் அபராதம் செலுத்தியுள்ளதாகவும் எஞ்சிய நால்வர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் மூத்த அமைச்சரும் பாதுகாப்பு அமைச்சருமான இஸ்மாயில் சபரி தெரிவித்துள்ளார்.

தொற்றை குறைக்கவும் பரவும் நோயை ஒழிக்கவும் அரசு மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு இது மிகப்பெரிய முட்டுக்கட்டையாக அமைகிறது என்று பலரும் தெரிவித்து வருகின்றனர். அரசுடன் மக்களும் இணைந்து உழைத்தால் மட்டுமே இது சாத்தியமாகும் என்றும் அரசு தெரிவித்துள்ளது. அதே சமயம் அரசு விதியை மீறுவோருக்கு 1000 ரிங்கிட்டில் இருந்து அபராதத்தை 10000 ரிங்கிட்டாக உயர்த்த வேண்டும் என்று சுகாதார அமைச்சக இயக்குநர் ஜெனரல் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

மலேசிய செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…

?? Facebook – https://www.facebook.com/tamilmicsetmalaysia/

?? Telegram      – https://t.me/malaysiatms