“குடிநுழைவு மையத்தில் சிக்கியிருந்த 142 இந்தியர்கள்” – பத்திரமாக சென்னை திரும்பினார்..!

Immigration Camp
Image tweeted by India in Malaysia

தற்போது உலக அளவில் மெல்ல மெல்ல உள்நாட்டு விமான சேவை மீண்டும் தொடங்கி உள்ளத்து. சில நாடுகள் குறிப்பிட்ட பிற நாடுகளுக்கு பன்னாட்டு விமான சேவையையும் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. மலேசியா உள்பட சீனா, வியட்நாம், ஸ்ரீலங்கா போன்ற நாடுகளில் தற்போது உள்நாட்டு சுற்றுலா மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. சுமார் 5 மாதகால போராட்டத்திற்கு பிறகு இந்த இதமான சூழல் நிலவினாலும் இன்னும் 90 சதவிகித உலக நாடுகள் முழு பூட்டுதலில் தான் உள்ளது என்பது நிதர்சனமான உண்மை. இந்நிலையில் பல நாடுகளும் பிற நாடுகளில் உள்ள தங்கள் மக்களை தாயகம் அழைத்து வருகின்றது.

இதையும் படிங்க : 10 சதவிகித வெளிநாட்டு ஊழியர்களை நீக்க முடிவு..? – பிரபல எஃப்.ஜி.வி நிறுவனம்..!

இந்திய அரசும் வந்தே பாரத் திட்டத்தை அறிமுகபடுத்தி பிற நாடுகளில் இருந்து தங்கள் நாட்டு மக்களை தாயகம் அழைத்து செல்கிறது. வந்தே பாரத் திட்டத்தின் மூலம் சிங்கப்பூரில் இருந்து தமிழக செல்லும் அடுத்த மாத விமானங்களின் பட்டியலை ஏற்கனவே வெளியிட்டுள்ளது சிங்கப்பூரில் செயல்படும் இந்திய உயர் கமிஷன். விரைவில் மலேசியாவில் இருந்து தமிழகம் செல்லும் விமானங்களின் பட்டியலும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் மலேசியாவில் உள்ள தடுப்பு காவல் நிலையங்களில் இருந்து இந்தியர்களை மீட்க சிறப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தது. அதன் விளைவாக மலேசியாவில் தடுப்புக்காவலில் இருந்த இந்தியர்கள் தாயகம் திரும்பி வருகின்றனர்.

மலேசிய செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…

?? Facebook – https://www.facebook.com/tamilmicsetmalaysia/

?? Telegram      – https://t.me/malaysiatms