“புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்” – தடுப்பூசி போடத்தவரும் முதலாளிகளுக்கு சிறை.!

Vaccine Abroad Workers
Image Tweeted by BFM News

மலேசியாவில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு தடுப்பூசி போட தவறும் அவர்களின் முதலாளிகளுக்கு சிறை தண்டனை வழங்கப்படும். (Vaccine Abroad Workers)

இந்த அறிவிப்பினை மனிதவள அமைச்சர் திரு. எம். சரவணன், எச்சரிக்கையாக தற்போது தெரிவித்துள்ளார். (Vaccine Abroad Workers)

மேற்குறிப்பிட்ட விதியை செய்யத்தவரும் முதலாளிகளுக்கு வீட்டுவசதி மற்றும் வேலைவாய்ப்பு வசதிகளுக்கான குறைந்தபட்ச தரைவரிசை விதியின்படி தண்டனை வழங்கப்படும்.

6500-க்கும் அதிகமான வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு கொரோனா.!?

அவர்களுக்கு மூன்று ஆண்டு சிறை தண்டனை, அல்லது RM200,000 வரை அபராதம் விதிக்கப்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

மலேசியாவில் பிப்ரவரி 26ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி வழங்கப்படும் என்று சில தினங்களுக்கு முன்பு பிரதமர் யாசின் அறிவித்தார்.

இந்நிலையில் புலம்பெயர்ந்த தொழிலாளிகளின் முதலாளிகள் தங்களுடைய தொழிலாளர்களை கட்டாயம் தடுப்பூசி முகாம்களுக்கு அழைத்துவர வேண்டும் என்று மனிதவள அமைச்சர் தெரிவித்தார்.

கடந்த பிப்ரவரி 16ம் தேதி பாதுகாப்பு அமைச்சர் வெளியிட்ட அறிக்கையின்படி சுமார் 6500-க்கும் அதிகமான வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு கொரோனா பரவியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மலேசியாவில் கட்டுமான தொழில் மற்றும் தொழிற்சாலையில் வேலைசெய்யும் வெளிநாட்டு தொழிலாளர்களிடம் தான் அதிக அளவில் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

மலேசியாவில் தினமும் 2000-க்கும் அதிகமான மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

அதே சமயம் தினமும் 4500-க்கும் அதிகமான மக்கள் கொரோனாவில் இருந்து விடுபட்டு வீடு திரும்பி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மலேசிய செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

 Facebook

Telegram