6500-க்கும் அதிகமான வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு கொரோனா.!

Abroad Workers Malaysia
Photo Courtesy Channel News Asia

மலேசியாவில் பணிபுரியும் 6500-க்கும் அதிகமான வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. (Abroad Workers Corona)

கடந்த பிப்ரவரி 1ம் தேதி முதல் வெளிநாட்டு ஊழியர்களுக்கு கொரோனா சோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. (Abroad Workers Corona)

மலேசியா to திருச்சி : ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்-ல் கடத்தப்பட்ட தங்கம்.!

இதுகுறித்து பாதுகாப்பு அமைச்சர் இஸ்மாயில் சபரி யாக்கோப் நேற்று ஒரு தகவலை வெளியிட்டுள்ளார்.

அந்த தகவலை அடிப்படையில் மலேசியாவில், வெளிநாடுகளில் இருந்து வந்து பணிபுரியும் சுமார் 6500ம் அதிகமான பணியாளர்களுக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் 3,70,000-க்கும் அதிகமான வெளிநாட்டு பணியாளர்களுக்கு கொரோனா சோதனை நடத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதலே கட்டுமான தளங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகின்றது என்று திரு. இஸ்மாயில் தெரிவித்தார்.

வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு போதிய அளவில் பாதுகாப்பு வழங்கி அவர்களுக்கு உரிய உதவிகள் வழங்கப்படுவதாகவும் இஸ்மாயில் தெரிவித்தார்.

கடந்த சில நாட்களாக உச்சத்தில் இருந்த கொரோனா தொற்று தற்போது மலேசியாவில் குறைய தொடங்கியுள்ளது.

மேலும் தினமும் கொரோனாவில் இருந்து மீண்டு வருவோரின் அளவும் பெருமளவு அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

இருப்பினும் நேற்று மலேசியாவில் ஒரே நாளில் 22 பேர் கொரோனா காரணமாக மரணித்துள்ளது பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

மலேசிய செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

 Facebook

Telegram