“கோலாலம்பூர் to திருச்சி மற்றும் டெல்லி” – தாயகம் வந்த 356 பயணிகள்”

Trichy Delhi Flights
Image tweeted by India in Malaysia

நேற்று மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து இந்திய தலைநகர் டெல்லி மற்றும் திருச்சி ஆகிய நகரங்களுக்கு இரண்டு விமானங்களில் 356 பயணிகள் பயணித்தனர். (Trichy Delhi Flights)

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் 1121 மற்றும் 1625 ஆகிய இரண்டு விமானங்கள் இந்த சேவையில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது. (Trichy Delhi Flights)

“வெளிநாட்டு ஊழியர்களுக்கு தங்குமிட வசதிகளை மேன்படுத்த வேண்டும்” – மலேசிய அரசு.!

கொரோனா தொடங்கிய பிறகு உலக அளவில் பன்னாட்டு விமான போக்குவரத்து தடைப்பட்டது. இந்நிலையில் கடந்த மே தொடங்கி இன்று வரை 100கணக்கான விமானங்கள் செயல்பட்டு வருகின்றன.

வந்தே பாரத் திட்டத்தின் கீழ் பல நாடுகளுக்கு இந்தியாவில் இருந்து விமானங்கள் இயக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நேற்று மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து 356 பயணிகள் தமிழகத்தின் திருச்சிக்கு மற்றும் டெல்லிக்கு வந்தே பாரத் திட்டத்தின் மூலம் வந்தடைந்தனர்.

டிசம்பர் 2020 2ம் தேதி தொடங்கி 30 வரை அனைத்து புதன்கிழமைகளிலும் கோலாலம்பூர் முதல் திருச்சிக்கு விமானம் இயக்கப்பட்டு வருகின்றது.

மலேசியாவில் செயல்படும் இந்திய உயர் கமிஷன் அதிகாரிகள் உதவியுடன் அனைத்து பயணிகளும் பாத்திரமாக அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் கூடுதலாக டிசம்பர் மாதம் 28ம் தேதியும் ஒரு சிறப்பு விமானம் இயக்கப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அதே போல டிசம்பர் 3ம் தேதி முதல் 17 வரை மூன்று வியாழக்கிழமைகளிலும் தமிழகத்தின் தலைநகர் சென்னைக்கு விமானங்கள் கோலாலம்பூரில் இருந்து இயக்கப்படுகிறது.

மேலும் விமானங்கள் குறித்த பல தகவல்களை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் தொடர்ந்து வெளியிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

அதே சமயம் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான பட்டியல், பயண இடம் மற்றும் ஏர் இந்தியா நிறுவனத்தில் வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்து தவறான தகவல் பரவிவருகிறது. (Trichy Delhi Flights)

மக்களை அதுபோன்ற போலியான செய்திகளை நம்ப வேண்டாம் என்றும். அது போன்ற அறிவிப்புகள் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே நேரம் பிற விமான சேவைகளை மலேசியாவிற்கு அளிக்காமல். ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் மூலம் அதிக அளவில் கட்டணம் வசூலிப்பதாக பயணிகள் பலர் குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர்.

மலேசிய செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

 Facebook

Telegram