“வெளிநாட்டு ஊழியர்களுக்கு தங்குமிட வசதிகளை மேன்படுத்த வேண்டும்” – மலேசிய அரசு.!

Abroad Workers Malaysia
Photo Courtesy tamilmurasu.com.sg

மலேசியாவில் வெளிநாட்டு தொழிலார்கள் தங்குமிடத்தை மேன்படுத்த வேண்டும் என்று மலேசிய அரசு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. (Abroad Workers Malaysia)

சில வாரங்களுக்கு முன்பு ஜோகூர் பகுதியில் வெளிநாட்டு ஊழியர்கள் தங்குமிடத்தில் கொரோனா தொற்று அதிகரிப்பதை காணமுடிந்தது. (Abroad Workers Malaysia)

“சிங்கப்பூரில் மலேசியர்கள்” – உதவிக்கரம் நீட்டும் ஜோகூர் மாநில மலேசிய இந்திய காங்கிரஸ்.!

இதனை தொடர்ந்து தற்போது மலேசிய அரசு வெளிநாட்டு ஊழியர்களுக்கு அவர்களின் தங்குமிட வசதிகளை மேன்படுத்த வேண்டும் என்று மலேசியா அரசு தெரிவித்துள்ளது.

வெளிநாட்டு ஊழியர்கள் நாட்டிற்குள் அழைத்துவரும் முன்பே அவர்களுக்கு தேவையான வசதிகளை உறுதி செய்ய வேண்டும் என்று பாதுகாப்பு அமைச்சர் தெரிந்தார்.

கொரோனா காலகட்டத்திற்கு பிறகு அந்நிய நாட்டு தொழிலார்களை பெரிய அளவில் ஏற்காமல் உள்ளூர் தொழிலார்களை கொண்டு வேலைகளை தொடங்க மலேசிய அரசு முடிவு செய்தது குறிப்பிடத்தக்கது.

சில காலத்திற்கு முன்பு முஸ்தபா சென்டர் நிறுவனம் பல வெளிநாட்டு ஊழியர்களை வேலை நிறுத்தம் செய்தது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே தங்களிடம் வேலை செய்து வந்த ஊழியர்களுக்கு மாதம் 300 டாலர் சம்பளம் வழங்கி வந்த அந்த நிறுவனம் பெரும் நஷ்டத்தை சந்தித்தது.

தற்போது வெளிநாட்டு தொழிலார்களுக்கு தடையும் விதிக்கப்பட்டுள்ள நிலையில் தங்களிடம் வேலைபார்த்து வரும் இந்தியா உள்பட பிற நாட்டு தொழிலார்களை திருப்பி அனுப்பி வருகின்றது.

இந்நிலையில் அரசின் இந்த முடிவு பல வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு ஆறுதல் அளிக்கும் வண்ணம் உள்ளது என்றால் அது மிகையல்ல.

மலேசிய செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

 Facebook

Telegram