“தமிழ்ப்பள்ளிகளுக்கான நிதி ஒதுக்கீட்டை மறுபரிசீலனை செய்யவேண்டும்”

Malaysia Tamil Schools
File Image

வரவிருக்கும் 2021ம் ஆண்டிற்கான பட்ஜெட், கடந்த வெள்ளியன்று அறிவிக்கப்பட்டது. பெரிக்காத்தான் நேஷனல் அரசின் தலைமையில் இந்த பட்ஜெட் அறிவிக்கப்பட்டது. (Tamil Schools Malaysia)

இந்நிலையில் இந்த பட்ஜெட் அறிவிப்பு குறித்து ஒரு முக்கிய கேள்வியை அப்போது முன்வைத்தார் பத்துகாஜா பகுதியில் நாடாளுமன்ற உறுப்பினர். (Tamil Schools Malaysia)

“20 பேர் மட்டுமே கூடலாம்” – தீபாவளிக்கு புதிய SOP வெளியீடு.”

திரு. சிவகுமார் அவர்கள் அப்போது வெளியிட்ட அறிக்கையில். அறிவிக்கப்பட்டுள்ள பட்ஜெட்டில் தமிழ் மற்றும் சீன பள்ளிகளுக்கான தனிப்பட்ட பட்ஜெட் அறிவிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்தார்.

இந்நிலையில் அந்த நிதி ஒதுக்கீட்டை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று உலகத் தமிழர் பாதுகாப்பு செயலகம் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளது.

சென்ற பட்ஜெட்டில் தமிழ் பள்ளிகளுக்கு என்று தனியாக 5 கோடி வெள்ளி, மித்ராவுக்கு 10 கோடி வெள்ளி மற்றும் தெக்குனுக்கு 2 கோடி வெள்ளி ஒதுக்கப்பட்டதை அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது.

அனால் இவ்வாண்டு அறிவிக்கப்பட்ட பட்ஜெட்டில் பொதுவாக கல்விக்கு என்று தான் பட்ஜெட் ஒதுக்கப்பட்டுள்ளதே அன்றி.

தமிழ் மற்றும் சீன பள்ளிகளுக்கு என்று தனித்தனியாக பட்ஜெட் அறிவிக்கப்படவில்லை என்று தெரிவித்துள்ளார்.

தேமு மற்றும் பக்காத்தான் ஹராப்பான் ஆகிய இரண்டு கட்சிகளின் ஆட்சிக்காலத்திலும் தமிழ், மித்ரா, மற்றும் தெக்குன் என்று தனித்தனியாக பட்ஜெட் ஒதுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது என்று அவர் குறிப்பிட்டார்.

 

மலேசிய செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

 Facebook

Telegram