“20 பேர் மட்டுமே கூடலாம்” – தீபாவளிக்கு புதிய SOP வெளியீடு.

Malaysia Deepavali
Tweeted File Image

இந்தியா மட்டும் இல்லாமல் உலக அளவில் இந்தியர்கள் மற்றும் தமிழர்களால் கொண்டாடப்படும் விழாக்களில் (Malaysia Deepavali) மிக முக்கியமானது தீபாவளி திருநாள்.

நமது மலேசியாவிலும் இந்த தீப ஒளித்திருநாள் வருகின்ற நவம்பர் மாதம் 14ம் தேதி கொண்டாடப்படவுள்ளது. மலேசிய மக்கள் இந்தவிழாவிற்கு ஆயத்தமாகி வருகின்றனர். (Malaysia Deepavali)

“சபாவிற்கு உடனடி உதவி வேண்டும், அடுத்த ஆண்டு அல்ல”

இந்நிலையில் கொரோனா தொற்று மலேசியாவின் பல இடங்களில் அதிகரித்து வருவதால் தீபாவளி பண்டிகையை கொண்டாட புதிய SOP-க்கள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தகவலை மூத்த அமைச்சர் இஸ்மாயில் சபரி யாக்கோப் அண்மையில் தெரிவித்தார். பண்டிகைக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில் இந்த SOP-க்கள் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

கடந்த வாரம் வெளியான இந்த SOP-யின் அடிப்படையில் இயக்கக்கட்டுப்பாடு அமலில் உள்ள பகுதிகளில் தீபாவளி கொண்டாட்டங்களில்போது 20 பேர் மட்டுமே பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

சிறிய வீடு அல்லது இடமாக இருப்பின் 10 பேர் மட்டுமே அங்கு கூட வேண்டும் என்றும் தெளிவாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கோலாலம்பூர் பகுதியில் ஏற்கனவே செயல்பாட்டில் உள்ள பொது நடமாட்டக்கட்டுப்பாடு அடுத்த மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் இயக்கக்கட்டுப்பாடு உள்ள பகுதியில் வாகனங்களில் செல்ல ஏற்கனவே உள்ள கட்டுப்பாடு அமலில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிற தீபாவளி பண்டிகைகளை போல இல்லாமல் இது மாறுபட்டதாக இருக்கும் என்றும் தெரிவித்தார் மாசாய் இந்தியர்கள் சமூகநல மேம்பாட்டுக்கான கழகத்தின் தலைவர் டத்தோ கே.புருஷோத்தமன்.

அரசு அறிவித்திருக்கும் இருக்கும் SOP-க்களை பின்பற்றி, மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இந்த தீபாவளியை கொண்டாட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

தீபாவளி சந்தைகள் மற்றும் கடைகளில் போலீசார் அவ்வப்போது சோதனை நடத்துவார்கள் என்றும் மூத்த அமைச்சர் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.

மலேசிய செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

 Facebook

Telegram