“சுதந்திர சுவாசத்தில் 63ம் ஆண்டு” – அனைத்து மலேசியர்களுக்கும் சுதந்திர தின வாழ்த்துக்கள்..!

Happy Independence Day

எங்கள் நாட்டில் சூரியன் மறைவதில்லை..!, என்று பெருமிதத்தோடு பல நூறு ஆண்டுகளாககூறிவந்த நாடு தான் இன்றைய லண்டன் நகரமான அன்றைய கால பிரிட்டீஷ் நாடு. உலகில் வியாபார ரீதியாக நுழைந்த அந்நாட்டினர் பின்னர் அந்த நாடுகளை தங்களுடைய ஆட்சிக்கு உள்படுத்தினார்கள்.

பூமி பந்தில் 3ல் ஒரு பங்கை தங்களது வசம் வைத்திருந்தால் தான் தங்கள் நாட்டில் சூரியன் எப்போதும் மறைவதில்லை என்று அவர்கள் கூற காரணம்.

இதையும் படிங்க : மலேசியா திரும்பிய 15 பேருக்கு நோய் தொற்று : அதில் 12 பேர் இந்தியர்கள் – சுகாதார அமைச்சகம்..!

பிரிட்டீஷ் ஆட்சி காலத்தில் அண்டை நாடான இந்தியா 200 ஆண்டுகால அடிமைக்கு பிறகு 1947ம் ஆண்டு தங்களுடைய விடுதலையை பெற்ற நிலையில் இயற்கை எழில் கொஞ்சம் நமது மலேசிய நாடு கடந்த 1957ம் ஆண்டு இதே நாளில் தனது சுதந்திரத்தை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

டுக்னு அப்துல் ரகுமான் என்பவரே அப்போது மலேசியாவின் பிரதமராக பொறுப்பேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. சுதந்திரம் பெற்ற 63 ஆண்டுகளில் இந்த நாட்டின் வளர்ச்சியோ பிரமாண்டமானது.

பல்தொழில் நிறுவங்கள் ஒருபுறம் வானுயர வளர இயற்கை அழகோ அதன் வழி வளர்ந்து வருகின்றது. பல நாடுகளை சேர்ந்த மக்கள் இங்கு ஒற்றுமையோடு வாழ்த்து வருகின்றனர். அனைத்து நாடுகளுடனும் நல்லுறவை நாடும் மலேசியா இந்த கொரோனா காலத்திலும் பல வளர்ந்த நாடுகளுக்கு மருத்துவத்தில் முன்னோடியாக திகழ்கின்றது என்றால் அது மிகையல்ல. பிற நாட்டு தலைவர்களும், மலேஷிய தலைவர்களும் மக்களுக்கு தங்களது இதயம் கனிந்த சுதந்திர தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

மலேசிய செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…

 Facebook

Telegram