“நடமாடக்கட்டுப்பாட்டு ஆணை நிறுத்தப்பட வேண்டும்.?” – லீ பூன் சாய்.!

Stop CMCO
Image courtesy Yahoo News Malaysia

மலேசியாவில் தற்போது கொரோனாவின் மூன்றாம் அலை நடப்பில் உள்ளது. இந்நிலையில் நடப்பில் உள்ள நடமாட்டக்கட்டுப்பாடு அகற்றப்படவேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. (Stop MCO)

முன்னாள் சுகாதாரத்துறை துணை அமைச்சர் டாக்டர் லீ பூன் சாய் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. (Stop MCO)

“மலேசியா – 60000 தொட்ட பாதிப்பு எண்ணிக்கை” – இதுவரை 350 பேர் மரணம்.!

தற்போது நடப்பில் உள்ள இந்த நடமாட்டக்கட்டுப்பாட்டால் பொருளாதார ரீதியாக பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு இறுதி வரை இதே நிலை நீடித்தால் நிலைமை மேலும் மோசமடைய என்றும் முன்னாள் அமைச்சர் தெரிவித்தார்.

சீனாவின் வூஹான் மாகாணத்தில் கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஒரு ஒற்றை தொற்றாக உருவெடுத்தது. மனித தவறா, வேண்டும் என்றே பரப்பப்பட்டதா என்று பல பல கேள்விகள் எழுந்து வருகின்றன.

உலக அளவில் பல சாதனைகளை படைத்த பல நாடுகளாலும் இந்த நோய்க்கு ஒரு தடுப்பு மருந்து கண்டறிய முடியாமல் தவித்து வருகின்றது.

போக்குவரத்து முடக்கம், தொழில் முடக்கம், பொருளாதார முடக்கம், வேலை இழப்பு என்று இந்த டிஜிட்டல் உலகம் கண்டிராத ஒரு பெரும் சரிவை இந்த பூமி கண்டு வருகின்றது.

இந்நிலையில் தைவான், ஜப்பான், வியட்நாம் போன்ற நாடுகள் செய்யாத ஒரு விஷயத்தை மலேசிய அரசு தற்போது செய்து வருவதாக பேராசிரியர் ஒருவர் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

முன்னாள் சுகாதார அமைச்சர் பேசுகையில், புதிதாக விதிக்கப்பட்டுள்ள தளர்வு பெரிய அளவில் தொற்றை தடுக்கவில்லை என்றும் கூறினார்.

SOP-க்களை மக்கள் முறையாக கடைபிடித்தால் மட்டுமே தொற்று குறையும் என்றும், CMCO அதை செய்து என்றும் அவர் தெரிவித்தாக தகவல் வெளியாகி உள்ளது.

மலேசிய செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

 Facebook

Telegram