“மலேசியா – 60000 தொட்ட பாதிப்பு எண்ணிக்கை” – இதுவரை 350 பேர் மரணம்.!

Corona in Malaysia
Image tweeted by Noor Hisham Abdullah

மலேசியாவில் கொரோனாவின் மூன்றாம் அலை மிகவும் மோசமான முறையில் பரவி வருகின்றது. நேற்று ஒரே நாளில் 1315 பேருக்கு தொற்று பரவியுள்ளது. (Corona in Malaysia)

அதிலும் குறிப்பாக சபா பகுதியில் தான் தொற்றின் அளவு அதிகம் உள்ளது. நேற்று உள்ளுரில் பாதிக்கப்பட்ட 1310 பேரில் 476 பேர் சபா பகுதியை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. (Corona in Malaysia)

“2021-ல் மலேசியர்களுக்கு கொரோனா தடுப்பூசி.?” – மலேசிய பிரதமர்.!

நேற்று பகல் 12 மணி நிலவரப்படி புதிதாக உள்ளூரில் 1310 பேருக்கும் வெளிநாடுகளில் இருந்து மலேசியா திரும்பிய ஐந்து பேருக்கும் தொற்று உறுதியாகி உள்ளது.

மலேசியாவை பொறுத்தவரை இதுவரை கொரோனவால் பாதித்த மக்களை எண்ணிக்கை என்பது 63176 என்ற மிகப்பெரிய அளவை தொட்டுள்ளது.

அதே சமயம் நேற்று ஒரே நாளில் 1110 பேர் குணமடைந்த நிலையில் இதுவரை 51314 பேர் நலமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

ஆரம்ப நிலையில் மலேசியாவில் Sabah மற்றும் Kedah பகுதியில் தான் அதிக அளவில் தொற்று காணப்பட்டது. இந்நிலையில் கெடா பகுதியில் தற்போது தொற்றின் அளவு குறைந்துள்ளது.

நேற்று கெடா பகுதியில் 17 பேருக்கு தொற்று பதிவானது குறிப்பிடத்தக்கது.

மேலும் மக்கள் SOP-க்களை முறையாக கடைபிடிப்பது மட்டுமே சிறந்த தீர்வாக இருக்கும் என்பது பலரின் கருத்து.

நேற்று மட்டும் மலேசியாவில் 4 பேர் கொரோனாவிற்கு பலியாகி உள்ளனர். இதுவரை 350 பேர் கொரோனா காரணமாக மரணித்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.

மலேசிய செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

 Facebook

Telegram