“மலேசியாவில் அவரச நிலை பிரகடனம்” – மாமன்னர் அறிவிப்பு.!

Petition to King
Photo Courtesy www.aa.com.tr

நேற்று மலேசியாவில் முன் எப்போதும் இல்லாத அளவில் ஒரே நாளில் 3000-க்கும் அதிகமான மக்கள் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர். (State of Emergency)

இதனை அடுத்து மலேசியாவில் அவசர நிலை பிரகடனம் செய்யப்படுவதாக மாமன்னர் சுல்தான் அப்துல்லா சுல்தான் அஹமத் ஷா அறிவித்துள்ளார். (State of Emergency)

“புதிய உச்சத்தில் கொரோனா” – சிலாங்கூரில் அதிகரிக்கும் தொற்று.!

பரவி வரும் பெருந்தொற்றை வேரடி மண்ணோட அகற்ற இந்த நடவடிக்கை அவசியம் என்று பலரும் கருதுகின்றனர்.

இவ்வாண்டு ஆகஸ்ட் மாதம் 1ம் தேதி வரை இந்த அவசர நிலை பிரகடனப்படுத்தப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் இந்த காலகட்டத்தில் தேர்தல் போன்ற விஷயங்கள் நிறைவேற்றப்பட்டது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் இந்த சூழலால் 10 மாதங்களே நிரம்பிய முஹிதீன் அவர்களின் ஆட்சிக்கு மிகவும் கடினமான ஒன்றாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

கடந்த 2013ம் ஆண்டு மலேசியாவில் காட்டுத்தீயினால் ஏற்பட்ட அவசரநிலை பிரகடனத்திற்கு பிறகு இந்த 2021ம் ஆண்டு தான் அறிவிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த அவசரநிலை பிரகடனம் குறித்த தகவல்கள் விரிவாக பிரதமர் அவர்களால் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மலேசிய செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

 Facebook

Telegram