மலேசியா to திருச்சி : ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்-ல் கடத்தப்பட்ட தங்கம்.!

smuggled gold trichy
Photo Courtesy The Economic Times

இந்தியாவில், திருச்சி விமான நிலையத்தில் சுமார் 2900 கிராம் எடை கொண்ட கடத்தல் தங்கம், விமான நிலைய அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. (smuggled gold trichy)

மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து புறப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் பயணித்ததன் மூலம் இந்த தங்கம் திருச்சிக்கு கடத்தப்பட்டுள்ளது. (smuggled gold trichy)

“மலேசியாவில் நான்கு இடங்களில் நீட்டிக்கப்படும் லாக் டவுன்” – பாதுகாப்பு அமைச்சர்.!

சுமார் 1 கோடி ருபாய் மதிப்புள்ள இந்த தங்கம் ராமநாதபுரம் மற்றும் காரைக்கால் ஆகிய இடங்களை சேர்ந்த மூவரால் கடத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

கடந்த சில வருடங்களாகவே திருச்சி விமான நிலையத்தில் கடத்தல் பொருட்கள் சிக்குவது வாடிக்கையாகி உள்ளது.

இந்நிலையில் கடத்தல் தங்கத்தோடு சிக்கிய மூவரும் கைது செய்யப்பட்டு அவர்களிடம் விமான நிலைய அதிகாரிகளும் போலீசாரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து புறப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் மூலம் இந்த தங்கம் கடத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

கைதான மூவரில், இருவர் ராமநாதபுரத்தை சேர்ந்தவர்கள் என்றும் ஒருவர் காரைக்கால் மாவட்டத்தை சேர்ந்தவர் என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

திருச்சி விமான நிலையத்தில் இருந்து தங்கம் எங்கு கடத்தப்பட இருந்தது, மலேசியாவில் இருந்து தங்கம் எப்படி கொண்டுவரப்பட்டது என்பது குறித்து விசாரணை நடந்து வருகின்றது.

மலேசிய செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

 Facebook

Telegram