“மலேசியாவில் நான்கு இடங்களில் நீட்டிக்கப்படும் லாக் டவுன்” – பாதுகாப்பு அமைச்சர்.!

PKP Tioman Island
Image Tweeted Ismail Sabri

NSC தொழில்நுட்பக் குழு சார்பில் நடத்தப்பட்ட கருத்தரங்கில், மலேசியாவில் 4 இடங்களில் மார்ச் 4ம் தேதி வரை நடமாடக்கட்டுப்பாட்டை நீடிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. (Lock Down Extend)

இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவலை மலேசியாவின் மூத்த அமைச்சர் இஸ்மாயில் சபரி யாக்கோப் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். (Lock Down Extend)

“மூன்று கட்டங்களாக கொரோனா தடுப்பூசி வழங்கப்படும்” – மலேசிய பிரதமர்.!

அவர் வெளியிட்ட பதிவில் “என்.எஸ்.சி தொழில்நுட்பக் குழுவில் பல்வேறு நிறுவனங்களுடன் இடர் மதிப்பீடு மற்றும் கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டது”.

“இதன் அடிப்படையில் சிலாங்கூர், WP கோலாலம்பூர், ஜோகூர் மற்றும் பினாங்கு மாநிலங்களுக்கான இயக்கக் கட்டுப்பாட்டு ஆணையை (பி.கே.பி) 4 மார்ச் 2021 வரை நீட்டிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.”

இதுவரை அங்கு அமலில் இருந்த கட்டுப்பாடுகள் மேலும் சில தினங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளதை அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.

தென்கிழக்கு ஆசிய நாடுகள் பட்டியலில் இந்தோனேஷியா மற்றும் பிலிபைன்ஸ் நாடுகளுக்கு அடுத்தபடியாக கொரோனா தொற்றில் மலேசியா மூன்றாம் இடத்தில் உள்ளது.

அதே சமயம் நேற்று மலேசியாவில் 2720 பேர் புதிதாக கொரோனவால் பாதிக்கப்பட்ட நிலையில் 5718 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர்.

அண்மைக்காலமாக பாதிப்பு எண்ணிக்கையை விட இரண்டு மடங்கு அதிகமான அளவில் மக்கள் குணமடைந்து வருவது மகிழ்ச்சியை தருகின்றது.

இந்த சூழ்நிலையில் புதிதாக விதிக்கப்படும் இந்த கட்டுப்பாடுகள் தொற்றின் அளவை மேலும் குறைக்க பெருமளவில் உதவியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மலேசிய செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

 Facebook

Telegram