“மலேசியா வந்த சிங்கப்பூர் கப்பல்” – நால்வருக்கு தொற்று உறுதியானதால் பதற்றம்..!

Malaysia Port
Picture Courtesy Today Online

உலக நாடுகளை அச்சுறுத்தும் கொரோனா நோய் தொற்றால் உலக அளவில் இறந்தவர்களின் எண்னிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதுவரை இந்த நோயின் காரணமாக 9354 பேர் மலேசியாவில் பாதிக்கப்பட்டுள்ளார், அதே சமயம் 9075 பேர் நோயில் இருந்து மீண்டு வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் மலேசியாவில் கொரோனா காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை நேற்று 128ஆக உயர்ந்துள்ளது.

அரசும் இந்த நோயை முற்றிலும் அழிக்க பல வழிகளில் போராடி வருகின்றது. வுஹான் நகரில் இருந்து மக்கள் மலேசியா வருவதற்கு பல தடைகளையும், விசா வழங்கும் முறைகளிலும் பல கட்டுப்பாடுகளையும் மலேசிய அரசு ஆரம்ப கட்டத்தில் கொண்டுவந்தது.

இதையும் படிங்க : மலாயாவின் ரப்பர் தோட்டமும் – இந்திய ஊழியர்களும் : வைரலாகும் உன்னத படைப்பு..!

இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் சில நாடுகளில் நிறுத்த அனுமதி மறுக்கபப்ட்ட ‘Westerdam’ என்ற சொகுசு கப்பலை, கடந்த பிப்ரவரி 14ம் தேதி கம்போடியா தனது துறைமுகத்தில் நிறுத்த அனுமதி அளித்தது.

இந்நிலையில் அந்த கப்பலில் பயம் செய்து, கம்போடியாவில் இறங்கி அங்கிருந்து மலேசியா வந்த அமரிக்கா பெண்மணி ஒருவற்கு கொரோனா நோய் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

ஆனால் அவருடன் பயணம் செய்த அந்த பெண்ணின் கணவருக்கு நோய் தொற்று இல்லை என்று ஆய்வின் முடிவு தெரிவித்தது

அதன் பிறகு பிற நாடுகளில் இருந்து கப்பல்களை ஏற்க மருத்துவந்த மலேசிய தற்போது சில தளர்வுகளை அறிவித்துள்ளது.

இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 28ம் தேதி சிங்கப்பூரில் இருந்து மலேசியாவின் போர்ட் டிக்சனுக்குச் வந்த ஒரு கப்பலின் மூலம் புதிய கொரோனா திரளை உருவாகி உள்ளது.

அந்த கப்பலில் வந்த 34 பணியாளர்களை சோதித்தலில் அவர்களில் நால்வருக்கு தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. மேலும் 24 பேரில் சோதனை முடிவுகள் எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது அந்த நால்வரும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மலேசிய செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…

 Facebook

Telegram