மலாயாவின் ரப்பர் தோட்டமும் – இந்திய ஊழியர்களும் : வைரலாகும் உன்னத படைப்பு..!

Rubber Farm
Image Courtesy Dolledupby_patma

மனிதன் என்ற இனம் தோன்றிய காலத்தில் இருந்தே அந்த இனத்திற்கு புலம்பெயர்தல் என்பது குணம் இயற்கையிலேயே இருந்தது. குறிப்பாக இந்தியாவில் உள்ள தமிழர்கள் உலகின் பல நகரங்களுக்கு பயணித்தனர் என்றால் அது மிகையல்ல.

ஆப்பிரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் வசிக்கும் பழங்குடிமக்கள் தமிழை தாய்மொழியாக கொண்டு விளங்குவதை இன்றளவும் நம்மால் பார்க்கமுடிகிறது.

அதே போல பல ஆண்டுகளுக்கு முன் அப்போதைய மலாயா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு ரப்பர் தோட்ட வேலைக்காக தமிழர்கள் அங்கு புலம்பெயர்ந்து வரலாறு சொல்லும் உண்மை.

இதையும் படிங்க : “சுதந்திர சுவாசத்தில் 63ம் ஆண்டு” – அனைத்து மலேசியர்களுக்கும் சுதந்திர தின வாழ்த்துக்கள்..!

இந்நிலையில் மலேசிய நாடு நேற்று தனது 63ம் சுதந்திர தினத்தை கொண்டாடிய நிலையில் பிரிட்டீஷ் ஆட்சி காலத்தில் அங்கு புலம்பெயர்ந்த இந்திய மூதாதையர்களை நினைவுகூரும் வகையில் எடுக்கப்பட்ட ஒரு போட்டோஷூட் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. புலம்பெயர்ந்து வந்த அந்த இந்திய மூதாதையர்களின் வாழ்வும் மலாயா நகரில் ரப்பர் தோட்டமும் பிரிக்கமுடியாத பந்தம் கொண்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

வேகமான நகரும் இக்கால சூழ்நிலையில் அந்த பொன்னான மனிதர்களின் தடங்கல் மெல்ல மெல்ல அழிந்து வருவது முற்றிலும் உண்மை. Dolledupby_patma என்ற அந்த முகப்புத்தக பக்க பதிவில் நீர்த்துவரும் அந்த மனிதர்களின் நினைவுகளை மீண்டும் அழகாக சித்தரிக்கும் வண்ணம் பல புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

மலேசிய செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…

 Facebook

Telegram