“மீண்டும் கடும் உச்சத்தில் உள்ளூர் தொற்று” – ஒரே நாளில் 259 பேருக்கு உறுதியான கோவிட் 19..!

Covid 19 Malaysia
Image tweeted by KKMalaysia

மலேசியாவில் பரவி வரும் தொற்று குறித்தும், தினமும் ஏற்படும் பாதிப்பு மற்றும் குணமடையும் மக்களின் எண்ணிக்கை குறித்தும் சுகாதார அமைச்சகம் தகவல் வெளியிட்டு வருகின்றது.

இந்நிலையில் மலேசிய சுகாதார அமைக்க இயக்குனர் ஜெனரல் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட அறிக்கையின் அடிப்படையில் (பகல் 12 மணி நிலவரப்படி) நேற்று ஒரே நாளில் முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு தொற்றின் அளவு அதிகரித்துள்ளது.

வெளிநாட்டில் இருந்து மலேசியா திரும்பிய ஒருவருக்கு தொற்று உறுதியானது. மேலும் உள்ளூர் தொற்று பல மாதங்கள் கழித்து (ஜூன் 4 2020) 3 இலக்கத்தை இன்று தொட்டுள்ளது.

ஒரே நாளில் 259 பேருக்கு உள்ளூரில் தொற்று உறுதியானது பலரை பீதியியல் ஆழ்த்தியுள்ளது. மேலும் இன்று மட்டும் 47 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நாட்டில் தற்போது கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 11,484 என்ற அளவை தொட்டுள்ளது.

அதே சமயம் 10,014 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதே போல இதுவரை 136 பேர் கொரோனா காரணமாக மலேசியாவில் இறந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : “தொடர் உச்சத்தில் உள்ளூர் தொற்று” – SOP-க்களை முறையாக கடைபிடிக்க அரசு வலியுறுத்தல்..!

இன்று பாதிக்கப்பட்ட 259 பேரில் அதிகபட்சமாக sabha பகுதியில் 118 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து sabha பகுதியில் இருந்து விமானநிலையம் வரும் மக்கள் கட்டாய கொரோனா சோதனைக்கு உள்ளாக்கப்படுவார்கள் என்று சுகாதார அமைச்சக இயக்குநர் ஜெனரல் தெரிவித்துள்ளார்.

அதே போல கெடா பகுதியில் 98 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் MOH அமைத்த SOP-க்களை மக்கள் மிகவும் கவனமாக கடைபிடிக்க வேண்டும் என்று சுகாதார அமைச்சக இயக்குநர் ஜெனரல் நூர் ஹிஷாம் தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு தொடக்கத்தில் மார்ச் மாதம் 18ம் தேதி ஊரடங்கு அமலுக்கு வந்தது.

சில தளர்வுகளுடன் 6 மாதங்களுக்கும் மேலாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அளிக்கப்பட்ட சில தளர்வுகளால் தற்போது மீண்டும் மலேசியாவில் தொற்றின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியுள்ளது.

 

மலேசிய செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…

*  Facebook

* Telegram

Related posts

மலேசியாவில் தைபூசம், விதிக்கப்படும் கட்டுப்பாடுகள் – மிரட்டும் கொரோனா 

Web Desk

“Sabah பகுதியில் தொடர்ந்து அதிகரிக்கும் தொற்று” – சுகாதார அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை..!

Editor

“Restoration MCO” – “சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி இல்லை” – மலேசிய பிரதமர் திட்டவட்டம்

Editor