“தொடர் உச்சத்தில் உள்ளூர் தொற்று” – SOP-க்களை முறையாக கடைபிடிக்க அரசு வலியுறுத்தல்..!

Malaysia Election
Image tweeted by noor hisham abdulla

மலேசியாவில் பரவி வரும் தொற்று குறித்தும், தினமும் ஏற்படும் பாதிப்பு மற்றும் குணமடையும் மக்களின் எண்ணிக்கை குறித்தும் சுகாதார அமைச்சகம் தகவல் வெளியிட்டு வருகின்றது.

இந்நிலையில் மலேசிய சுகாதார அமைக்க இயக்குனர் ஜெனரல் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட அறிக்கையின் அடிப்படையில் (பகல் 12 மணி நிலவரப்படி) நேற்று ஒரே நாளில் முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு தொற்றின் அளவு அதிகரித்துள்ளது.

நேற்று வெளிநாடுகளில் இருந்து மலேசிய திரும்பிய 4 பேருக்கு தொற்று உறுதியானது. மேலும் உள்ளூர் தொற்று பல வாரங்கள் கழித்து 3 இலக்கத்தை நேற்று முன்தினம் தொட்டுள்ளது பலரை பீதியியல் ஆழ்த்தியுள்ளது.

இந்நிலையில் நேற்று ஒரே நாளில் 97 பேர் உள்ளூரில் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க : “இந்தியா வரும் பயணிகள் தனிமைப்படுத்துதலில் இருந்து விலக்கு கோரலாம்” – ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்.!

நேற்று பாதிக்கப்பட்ட 97 பேரில் அதிகபட்சமாக sabha பகுதியில் 73 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து sabha பகுதியில் இருந்து விமானநிலையம் வரும் மக்கள் கட்டாய கொரோனா சோதனைக்கு உள்ளாக்கப்படுவார்கள் என்று சுகாதார அமைச்சக இயக்குநர் ஜெனரல் தெரிவித்துள்ளார்.

மேலும் MOH அமைத்த SOP-க்களை மக்கள் மிகவும் கவனமாக கடைபிடிக்க வேண்டும் என்று சுகாதார அமைச்சக இயக்குநர் ஜெனரல் நூர் ஹிஷாம் தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு தொடக்கத்தில் மார்ச் மாதம் 18ம் தேதி ஊரடங்கு அமலுக்கு வந்தது.

சில தளர்வுகளுடன் 6 மாதங்களுக்கும் மேலாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அளிக்கப்பட்ட சில தளர்வுகளால் தற்போது மீண்டும் மலேசியாவில் தொற்றின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியுள்ளது.

மேலும் மலேசியாவில் மீண்டும் ஊரடங்கு என்பது இந்த நாட்டில் பொருளாதாரத்திற்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும் என்று உலக வாங்கி குழுமத்தை சார்ந்த ரிச்சர்ட் ரெகார்ட் அண்மையில் குறிப்பிட்டிட்டது நினைவுகூரத்தக்கது.

மலேசிய செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…

*  Facebook

* Telegram