“சிங்கப்பூர் வரும் மலேசிய பயணிகள்” – இன்று முதல் அமலுக்கு வந்த புது விதி.!

Covid 19 Vaccine
Image Courtesy The Straight Times

நவம்பர் 22 நள்ளிரவு தொடங்கி சிங்கப்பூரில் புதிய விதி அமலுக்கு வந்துள்ளது. 14 நாட்கள் அல்லது அதற்கும் மேல் மலேசியாவில் தங்கி இருந்து பின் சிங்கப்பூர் வருவோருக்கு இந்த விதி பொருந்தும். (Quarantine in Singapore)

14 நாட்கள், அல்லது அதற்கும் மேல் மலேசியாவில் தங்கியிருந்தவர்கள், கட்டாய தனிமைப்படுத்துதலுக்கு உள்பட வேண்டும் என்று சிங்கப்பூர் அரசு குறிப்பிட்டுள்ளது. (Quarantine in Singapore)

“நான்கு மாநிலங்களில் கட்டுப்பாடுகளில் தளர்வு” – மலேசிய அரசு.!

மேலும் சபா பகுதியில் இருந்து வருபவர்கள் 14 நாட்கள் அரசு தனிமைப்படுத்துதல் மையங்களில் தங்க வேண்டும்.

அதே சமயம் மலேசியாவின் பிற பகுதிகளில் இருந்து வருபவர்கள் தங்கள் இருப்பிடங்களில் 14 நாட்களை தனிமைப்படுத்துதலில் இருக்க அரசு அறிவித்துள்ளது.

கடந்த ஜூலை மாதம் செய்தியாளர்களை சந்தித்த மலேசிய பாதுகாப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப் ஒரு புதிய தகவலை தெரிவித்தார்.

இதுவரை பிறநாடுகளில் இருந்து தாயகம் திரும்பியவர்கள் தொற்று இல்லாதபட்சத்தில் அவர்களது வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ள அணுமதிக்கப்பட்டனர்.  (Quarantine in Singapore)

ஆனால் பலர் அதை மீறுவதாகவும், ஆகையால் இனி நாடு திரும்புவோர்கள் அரசு அனுமதிக்கும் நிலையங்களில் கட்டாய தனிமைப்படுத்துதலுக்கு உள்ளாக்கப்படுவார்கள் என்றும் தெரிவித்தார்.

மேலும் இதற்கான கட்டணத்தினையும் அவர்கள் ஏற்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார். அமைச்சரின் இந்த அறிவிப்புக்கு மலேசியா சுகாதார அமைச்சகம் தங்களுடைய ஆதரவை தெரிவித்தது.

மேலும் இந்த நடவடிக்கை கடந்த ஜூலை 24 2020 முதல் அமலில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

தற்போது மலேசிய பயணிகளுக்கும் இந்த விதி சிங்கப்பூரில் விதிக்கப்பட்டுள்ளது. அதே போல ஜப்பானில் 14 நாட்கள் தங்கியிருந்து அதன் பிறகு சிங்கப்பூர் வரும் பயணிகளுக்கும் இது பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

மலேசிய செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

 Facebook

Telegram