“நான்கு மாநிலங்களில் கட்டுப்பாடுகளில் தளர்வு” – மலேசிய அரசு.!

PKP in Malaysia
Image tweeted by EdgeProp Malaysia

மலேசியாவில் தொற்றின் அளவு குறைய தொடங்கியுள்ள 4 மாநிலங்களில், ஏற்கனவே விதிக்கப்பட்ட கட்டுப்பாட்டில் இருந்து சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. (MCO Relaxation)

மலேசியாவின் ஜோகூர், மலாக்கா, கெடா மற்றும் திரங்கானு ஆகிய நான்கு மாநிலங்களில் ஏற்கனவே நடப்பில் இருக்கும் கட்டுப்பாடுகளில் இருந்து தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. (MCO Relaxation)

“இந்தியர்கள் நலனுக்கு எப்போதும் முக்கியத்துவம் அளிக்கிறோம்”

அதே சமயம் கிளந்தான் மாநிலத்தில் புதிதாக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதையும் மலேசிய அரசு உறுதி செய்துள்ளது.

நேற்று மலேசியாவில் ஒரே நாளில் 1096 பேருக்கு கொரோனா தொற்று பரவியுள்ளது. மேலும் 1104 பேர் இந்த நோயில் இருந்து விடுபட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நேற்று ஜோககூர் பகுதியில் 9 பேரும், மலாக்கா பகுதியில் ஐந்து பேரும், கெடா பகுதியில் 16 பேரும் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

திரங்கானு பகுதியில் நேற்று யாருக்கும் தொற்று கண்டறியப்படவில்லை. மேலும் கிளந்தான் மாநிலத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் கிளந்தான் பகுதியில் சில இடங்களில் உள்ள அனைத்து வெளிநாட்டு ஊழியர்களுக்கும் கோவிட் 19 சோதனை நடத்த அரசு முடிவெடுள்ளது.

மலேசியாவில் தற்போது கொரோனாவின் மூன்றாம் அலை நடப்பில் உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் 1000-க்கும் அதிகமான மக்கள் தினமும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். MCO Relaxation

மேற்குறிப்பிட்ட நான்கு மாநிலங்கள் உள்பட சில மாநிலங்களில் தளர்வு அளிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகி வருகின்றது.

மலேசிய செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

 Facebook

Telegram