“மேலும் மூன்று இடங்களில் மீண்டும் நடமாடக்கட்டுப்பாடு அமல்”

PKPP in Perak
Picture Courtesy Astro Awani

நெகிரி செம்பிலான், கெடா மற்றும் பேராக் ஆகிய இடங்களில் நடமாட்டக்கட்டுப்பாடு மீண்டும் அமலுக்கு வருகின்றது என்றார் இஸ்மாயில் சபரி யாக்கோப். (PKPP in Perak)

அதுமட்டும் இல்லாமல் கிளந்தான், சிலாங்கூர் மற்றும் கோலாலம்பூர் ஆகிய இடங்களிலும் நடமாட்டக்கட்டுப்பாடு அமலுக்கு வருகின்றது. (PKPP in Perak)

“தியோமான் தீவில் பி.கே.பி அமல்” – மூத்த அமைச்சர் இஸ்மாயில் சபரி யாக்கோப்.!

கோலாலம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் மார்ச் 19 முதல் 31 வரையும் சரவாக் பகுதியில் 29ம் தேதி வரையும் நடமாட்டக்கட்டுப்பாடு அமலில் இருக்கும்.

கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டு வந்தாலும் மலேசியாவில் பல இடங்களில் கணிசமான அளவிற்கு கொரோனா தொடர்ந்து பரவி தான் வருகின்றது.

தியோமான் தீவிலும் நேற்று தொடங்கி வரும் 29ம் தேதி வரை பி.கே.பி.டி அமல்படுத்தப்படுவதாக மூத்த அமைச்சர் இஸ்மாயில் சபரி யாக்கோப் தெரிவித்தார்.

ஏற்கனவே கே.எல், பினாங்கு, சிலாங்கூர் மற்றும் ஜோகூர் ஆகிய பகுதிகளில் மார்ச் 5ம் தேதி தொடங்கி 18ம் தேதி பி.கே.பி. அமல்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் சபா மாநிலத்தை தவிர்த்து பிற இடங்களில், மாநிலம் கடந்த பயணத்திற்கு அனுமதி தற்போது வழங்கப்பட்டுள்ளது.

அதேபோல கிளந்தான், சரவாக் மற்றும் கெடா ஆகிய பகுதிகளில் நடப்பில் உள்ள நடமாட்டக்கட்டுப்பாடு அமலில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்று மலேசியாவில் புதிதாக 1063 பேருக்கு நோய் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அதே சமயம் 1365 பேர் குணமடைந்து வீடுதிரும்பியுள்ளனர்.

தற்போது மலேசியாவில் கொரோனா தடுப்பூசி வழங்கும் பணி முழுவீச்சில் தொடங்கி நடந்து வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

முன்களப்பணியாளர்கள் 5 லட்சம் பேரின் பெயர் பட்டியல் தயாரிக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகின்றது.

அடுத்த ஆண்டு தொடக்கத்திற்குள் சுமார் 32 மில்லியன் பேருக்கு கொரோனா தடுப்பூசி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மலேசிய செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

 Facebook

Telegram