“இந்த போரில் வெல்ல மக்கள் ஒத்துழைக்க வேண்டும்” – நூர் ஹிஷாம் அப்துல்லா உருக்கம்..!

Malaysia Corona
Image tweeted by Noor Hisham Abdullah

உலகத்தை அச்சுறுத்தி வரும் இந்த கொடிய நோயில் இருந்து மெல்ல மெல்ல மலேஷியா மீண்டு வந்த நிலையில் கடந்த சில நாட்களாக மீண்டும் தொற்றின் வேகம் என்பது அதிகரித்துள்ளது.

நேற்றைய பகல் 12 மணி நிலவரப்படி புதிதாக உள்ளூரில் 487 பேருக்கும் வெளிநாடுகளில் இருந்து மலேசியா திரும்பிய இருவருக்கும் தொற்று உறுதியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது. நல்வாய்ப்பாக நேற்று யாரும் கொரோனா காரணமாக இறக்கவில்லை.

மலேசியாவை பொறுத்தவரை இதுவரை கொரோனவால் பாதித்த மக்களை எண்ணிக்கை என்பது 13993 என்ற அளவை தொட்டுள்ளது.

நேற்று ஒரே நாளில் 74 பேர் குணமடைந்த நிலையில் இதுவரை 10501 பேர் நலமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மலேசியாவில் Sabah மற்றும் Kedah பகுதியில் தான் அதிக அளவில் தற்போது தொற்று காணப்படுகிறது.

இதையும் படிங்க : “Sabah பகுதியில், தொற்று அதிகரிப்புக்கு தேர்தல் ஒரு காரணமாக இருக்கலாம்” – மலேசிய பிரதமர்..!

சுகாதார அமைச்சகத்தின் இயக்குநர் ஜெனரல் நூர் ஹிஷாம் அப்துல்லா வே;வெளியிட்ட ட்விட்டர் பதிவில் “தற்போது மீண்டும் அதிகரித்து வரும் இது கொரோனா தொற்றை எதிர்த்து நாம் அனைவரும் போரிட வேண்டும்.

ஆனால் இந்த போர் மக்களின் ஒத்துழைப்பு இல்லாமல் சாத்தியமாகாது. மக்கள் தேவை இன்றி வெளியில் செல்லாமல் வீட்டில் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.

மேலும் அத்யாவசிய வேலைக்காக வெளியில் செல்வோர் SOP-க்களை மிக கவனமாக கடைபிடிக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

இந்த நோயை எதிர்த்து போராடும் அனைத்து போராளிகளும் நமது ஒற்றை எதிரியான இந்த கோவிட் 19ஐ எதிர்த்து போராடுவோம் என்றும் அவர் வெளியிட்ட பதிவில் தெரிவித்துள்ளார்.

தற்போதைக்கு மலேசியாவில் இயக்கக்கட்டுப்பாடு இருக்காது என்றபோதும் அது பொருளாதார சரிவை சரிசெய்யவே அன்றி மக்கள் தேவை இன்றி நடமாட அல்ல என்று மூத்த அமைச்சர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

மலேசிய செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

 Facebook

Telegram