“Sabah பகுதியில், தொற்று அதிகரிப்புக்கு தேர்தல் ஒரு காரணமாக இருக்கலாம்” – மலேசிய பிரதமர்..!

Malaysia Corona Vaccine
Image tweeted by Muhyiddin Yassin

உலக அளவில் பரவி வரும் தொற்று இன்னும் ஒரு சில ஆண்டுகள் நம்முடன் தான் இருக்கும் என்று அறிஞர்கள் சொல்லும்போது அது பல மக்களை பீதியில் ஆழ்த்துகிறது.

வணிகம், போக்குவரத்துக்கு போன்ற பல விஷங்களை நம்பியே வாழ்க்கையை நகர்த்தும் மக்களுக்கு அது பெரும் இடியாக உள்ளது என்றால் அது மிகையல்ல.

கடந்த 6 மாதத்திற்கும் மேலாக மலேசியாவில் கொரோனா கோர தாண்டவம் ஆடி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதுவரை மலேசியாவில் 141 பேர் கொரோனா காரணமாக இறந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் கடந்த சில நாட்களாக வெளியாகும் செய்திகள் பல மாத கடின உழைப்பை சீர்குலைக்கும் வண்ணம் உள்ளது என்பது வேதனை அளிப்பதாக பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

கடந்த மார்ச் மாதம் 18ம் தேதி மலேசியாவில் ஊரண்டங்கு பிறப்பிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. மருத்துவர்கள், காவலர்கள், மருத்துவ பணியாளர்கள் என்று பலர் தங்களுடைய உயிரையும் பணயம் வைத்து இந்த மருந்து கண்டறியப்படாத நோயை எதிர்த்து போராடி வருகின்றனர்.

இதையும் படிங்க : “அமைச்சரவை கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சருக்கு தொற்று” – வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்ட மலேசிய பிரதமர்..!

ஆனால் கடந்த ஒரு வாரகாலமாக தொடர்ந்து தொற்றின் எண்ணிக்கை அதிகரித்து வருவது மக்களையும் அரசையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது. 300 என்ற அளவே அதிகம் என்று நினைத்திருந்த நிலையில் நேற்று ஒரே நாளில் 688 பேருக்கு தொற்று உறுதியானது. அது மட்டும் இல்லாமல் இதுவரை இல்லாத அளவில் ஒரே நாள் 4 பேர் கொரோனாவிற்கு பலியாகி உள்ளனர்.

இந்நிலையில் நேற்று தொலைக்காட்சி மூலம் மக்களை சந்தித்த மலேசிய பிரதமர் sabah பகுதியில் நடத்தப்பட்ட தேர்தல் தொற்று பரவலுக்கு ஒரு காரணம் என்பதை ஒப்புக்கொண்டார். அதே சமயம் இந்த இக்கட்டான சூழல் இந்த தேர்தல் அவசியமானது என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும் தொற்று அதிகம் காணப்படும் Sabah, Kedah போன்ற பகுதிகள் அன்றி பிற பகுதிகளில் இயக்கக்கட்டுப்பாடு இருக்காது என்றும் அவர் தெரிவித்தார்.

மலேசிய செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

 Facebook

Telegram