“ஆவனமற்ற அந்நியர்களுக்கு பொதுமன்னிப்பு குறித்து பேச்சுவார்த்தை” – அமைச்சர் கைரி.!

Two Dose Vaccine
Image Tweeted by Minister Khairy Jamaluddin

மலேசியாவில் ஆவனமற்ற அந்நியர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்குவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. (Minister Jamaluddin)

அமைச்சர் கைரி ஜமாலுடின் இந்த விவகாரம் குறித்து உலக சுகாதார அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை நடாத்தியுள்ளதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். (Minister  Jamaluddin)

“மேலும் மூன்று இடங்களில் மீண்டும் நடமாடக்கட்டுப்பாடு அமல்”

மலேசியாவில் கொரோனா தொற்றால் கள்ளக்குடியேறிகள் அதிகம் பாதிக்கப்படுவதால் அவர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

சட்டவிரோத குடியேறிகள் பலர் மலேசியாவில் கொரோனா தொற்று ஆளாகிவருவதால் அவர்கள் சோதனை செய்துகொள்ள முன்வர இந்த மன்னிப்பு உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆண்டின் தொடக்கத்தில் இருந்து மலேசிய அரசு மற்றும் குடிநுழைவுத்துறை உரிய ஆவணங்கள் இன்றி மலேசியாவில் தங்கியுள்ள பிற நாடுகளை சேர்ந்த தொழிலார்களை கைது செய்து வருகின்றனர்.

மஸ்ஜித் இந்தியாவில் தொடங்கி பல இடங்களில் இந்த சோதனை நடைபெற்றது. அதே சமயம் உரிய ஆவணங்கள் இல்லாத பல நூறு வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில் அந்த சட்டவிரோத குடியேறிகளுக்கு வேலைக்கான பெர்மிட் வழங்குவது குறித்து அண்மையில் மலேசிய அரசு ஆலோசனை செய்தது குறிப்பிடத்தக்கது.

தற்போது உலகம் முழுக்க நிலவும் இக்கட்டான சூழலால் பிற நாடுகளை போல மலேசிய பொருளாதாரமும் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக செம்பனை மற்றும் ரப்பர் தோட்டம் ஆகிய இடங்களில் வேலையாட்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

இந்த சூழ்நிலையை சரிசெய்ய கள்ளக்குடியேறிகளை பயன்படுத்த அரசு யோசித்து வருகின்றது.

அதே சமயம் அவர்களிடையே தொற்று பரவும் எண்ணிக்கை அதிக அளவில் உள்ளதால் அவர்களுக்கு பொதுமன்னிப்பு அளித்து.

அவர்களை பரிசோதனைக்கு வர இடம்கொடுக்க வேண்டும் என்று கருத்து எழுந்துள்ளது.

மலேசிய செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

 Facebook

Telegram