“சிங்கப்பூரில் மலேசியர்கள்” – உதவிக்கரம் நீட்டும் ஜோகூர் மாநில மலேசிய இந்திய காங்கிரஸ்.!

Malaysia Singapore Border
Image Courtesy Malay Mail

சிங்கப்பூரில் வேலை செய்யும் மலேசியர்களுக்கு உதவு தற்போது நேரடி தொடர்பு எண்களுடன் சேவையை அளிக்க தொடங்கியுள்ளது ஜோகூர் மாநில மலேசிய இந்திய காங்கிரஸ். (Malaysia Singapore Border)

அண்மையில் மலேசியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய இரு நாடுகளுக்கு இடையிலான எல்லையை விரையில் திறக்க வேண்டும் என்று வர்த்தகர்கள் கோரிக்கை முன்வைத்தனர். (Malaysia Singapore Border)

“தமிழகத்தை முந்தும் மலேசியா.?” – தொடர்ந்து அதிகரிக்கும் தொற்று.

இரு நாடுகளுக்கு இடையிலான போக்குவரத்துக்கு கொரோனா காரணமாக நிறுத்தப்பட்டிருந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் 17ம் தேதி முதல் மீண்டும் எல்லைகள் திறக்கப்பட்டன.

ஆனால் வர்த்தகர்கள் பயன்பாட்டிற்கு முழுமையாக மலேசியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய எல்லைகள் திறக்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது.

முழுமையாக எல்லைகள் திறக்கப்படாததால் சிங்கப்பூரில் பணிபுரியும் மலேசியர்கள் அவசர தேவைக்கு மலேசிய திரும்ப முடியமால் தவித்து வருகின்றனர்.

ஏற்கனவே ஜோகூர் பகுதி மக்கள் அரசிடம் இந்த கோரிக்கையை முன்வைத்தது குறிப்பிடத்தக்கது. சிங்கப்பூர் சுகாதார அமைச்சர் கான் கிம் யோங் சில தினங்களுக்கு முன்பு ஒரு அறிக்கையை வெளியிட்டார்.

அந்த அறிக்கையில் மலேசியாவில் இருந்து சிங்கப்பூர் திரும்பும் பணியாளர்கள் 7 நாட்கள் தனித்திருக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.

தற்போது இறப்பு, இறுதிச்சடங்கு போன்ற அவசர தேவைகளுக்காக மலேசியா திருப்ப நினைப்போருக்கு, சளி மற்றும் எச்சில் மாதிரி உள்ளிட்ட விஷயங்களை மேற்கொள்ள ஜோகூர் மாநில மலேசிய இந்திய காங்கிரஸ் உதவி வருகின்றது.

மலேசிய செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

 Facebook

Telegram