“ஆர்.டி.எஸ் ரயில் திட்டத்தால் மலேசிய பொருளாதாரம் உயரும்” – ஜோகூர் சுல்தான்.!

Malaysia Johor Sultan
Twitter Image

ஜோகூர் மற்றும் சிங்கப்பூர் இடையேயான ஆர்.டி.எஸ் ரயில் திட்டத்தால் மலேசியாவில் பொருளாதாரம் உயரும் என்று ஜோகூர் சுல்தான் தெரிவித்துள்ளார். (Malaysia Johor Sultan)

சிங்கப்பூர் மற்றும் ஜோகூர் பரு ஆகிய நகரங்களை இணைக்கும் ஆர்.டி.எஸ் ரயில் திட்டம் 2026ம் ஆண்டுக்குள் முடிக்கப்படும் என்று சுல்தான் இப்ராஹிம் இஸ்கந்தர் தெரிவித்தார். (Malaysia Johor Sultan)

முதற்கட்டமாக 5,70,000 முன்களப்பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கப்படும்.!

இந்த ரயில் திட்டத்தால் சிங்கப்பூரில் இருந்து ஜோகூர் வந்தடைய வெறும் 5 நிமிடங்கள் மட்டுமே தேவைப்படும் என்று சுல்தான் தெரிவித்தார்.

ஜோகூர் பரு என்பது மலாய் தீபகற்பத்தின் தெற்கு முனையில் அமைந்துள்ள ஒரு நகரம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு சிங்கப்பூருக்கும் ஜோகூர் பருவுக்கும் இடையே ரயில் இணைப்புத் திட்டம் தொடர்பான ஒரு ஒப்பந்தம் முடிவானது.

கடந்த ஏப்ரல் மாதத்திற்குள் இந்த ஒப்பந்தத்தை நிறைவு செய்ய இரு நாடுகளும் முயற்சி மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.

அதன் பிறகு கொரோனா இடர்பாடவே இந்த பனி கிடப்பில் போடப்பட்டது. அதன் பிறகு தற்போது இந்த ரயில் திட்ட பணிகள் தற்போது மீண்டும் தொடங்கியுள்ளது.

இந்த ரயில் பாதை திட்டத்தால் பெருமளவு மலேசியாவின் பொருளியல் பெருகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இந்த திட்டத்திற்கான செலவை இரு நாடுகளும் 61:39 என்ற விகிதத்தில் பிரித்துக்கொள்ளும் என்றும் மலேசியா 3.710 பில்லியன் ரிங்கிட் இதற்காக செலவு செய்யும் என்றார் சுல்தான்.

மேலும் இரு ரயில் நிலையங்களுக்கும் உச்சகட்ட பயண நேரமாக சுமார் 3.6 நிமிடங்கள் மட்டுமே இருக்கும் என்றும் சுல்தான் தெரிவித்தார்.

விரைந்து நடந்துவரும் ரயில் பாதை பணிகள் வரும் 2026ம் ஆண்டிற்குள் முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மலேசிய செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

 Facebook

Telegram