முதற்கட்டமாக 5,70,000 முன்களப்பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கப்படும்.!

Corona Virus Mutation
Twitter Image

மலேசியாவில் கொரோனா தடுப்பூசி வழங்கும் பணியில், முதற்கட்டமாக 5,71,802 முன்களப் பணியாளர்களுக்கு வழங்க பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது. (Vaccine Front-liners)

இந்த அறிவிப்பினை பிரபல செய்தி நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. (Vaccine Front-liners)

“கோலாலம்பூர் முதல் திருச்சி வரை” – வந்தே பாரத்தின் 200வது சேவை.!

நேற்று பிப்ரவரி 21ம் தேதி ஜெர்மன் மற்றும் அமெரிக்கா ஆகிய நகரங்களில் இருந்து முதற்கட்ட தடுப்பூசி மலேசியா வந்திறங்கியது.

மேலும் அடுத்தகட்ட தடுப்பூசி வரும் 26ம் தேதி மலேசியா வந்தடையும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் பிப்ரவரி 26ம் தேதி தொடங்கி மூன்று கட்டங்களாக இந்த கொரோனா தடுப்பூசி மக்களுக்கு வழங்கப்படவுள்ளது.

தற்போது 5,71,802 முன்களப்பணியாளர்களின் பெயர் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கு முதற்கட்டமாக தடுப்பூசி வழங்கப்படும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

படிப்படியாக அடுத்த ஆண்டு தொடக்கம் வரை அனைவருக்கும் இந்த தடுப்பூசி வழங்கப்பட உள்ளது.

மேலும் இந்த தடுப்பூசியின் ஒரு “டோஸ்” மக்களுக்கு தேவையான எதிர்ப்புசக்தியை தரும் என்று ஆய்வின் முடிவுகள் கூறுகின்றன.

மலேசியாவில் நேற்று மீண்டும் 3000-க்கும் அதிகமான மக்கள் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டனர். மேலும் 5 பேர் கொரோனாவால் மரணித்துள்ளனர்.

அதே சமயம் நேற்று ஒரே நாளில் 4456 பேர் கொரோனாவில் இருந்து பூரண குணமடைந்துள்ளனர் என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மலேசிய செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

 Facebook

Telegram