“நெருங்கும் பண்டிகைகள் – உச்சம் தொடும் உள்ளூர் பழங்களின் விலைகள்.”

Malaysia Fruits
Image tweeted by Botanist Adventures

கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ள பலவற்றுள் காய்கறி மற்றும் பழங்களின் வர்த்தகமும் ஒன்று. மலேசியாவில் உள்ளூர் பழங்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. (Malaysia Fruits)

சீனாவின் ஹூபே மாகாணத்தின் தலைநகர் வுஹான் நகரில், கடந்த ஆண்டு இறுதியில் பரவத் தொடங்கியது கொரோனா நோய் தொற்று. (Malaysia Fruits)

சமையல் கலைஞராக மாறிய விமான கேப்டன்.!

இந்த நோய் தொற்று காரணமாக கோடிக்கணக்கான மக்கள் உலக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இந்த கொரோனா காரணமாக இவ்வாண்டு தொடக்கத்தில் மலேசியாவில் டூரியன் பழங்களின் வாணிபம் முன்பு இருந்த நிலையை விட மிகவும் கவலைக்கிடமான நிலைக்கு தள்ளப்பட்டது.

சீனாவில் இருந்து மலேசியாவிற்கு கப்பல் போக்குவரத்துக்கு நிறுத்தப்பட்டதாள் டூரியன் பழங்களின் ஏற்றுமதி பெருமளவில் பாதிக்கப்பட்டது.

இந்நிலையில் தற்போது மலேசியாவில் உள்ளூரில் பழங்களின் வர்த்தகமும் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பழங்களின் விலையும் இருமடங்காக உயர்ந்துள்ளது.

மலேசியாவில் இந்தியர்களின் பண்டிகைகளிலும், கோவில் பூசைகளிலும் பெரிதும் பயன்படுத்தப்படுவது வாழைப்பழம் தான்.

பூசைகள் தொடங்கி உணவுகள் வரை பல இடங்களில் வாழைப்பழங்கள் பெரும் பங்கு வகிக்கின்றன. இந்நிலையில் மலேசியாவில் வாழைப்பழங்கள் விலை கிலோவிற்கு 2 வெள்ளி வரை உயர்ந்துள்ளது.

ரஸ்தாளி ரக பழங்கள் கிலோ 5 வெள்ளி விற்றுவந்த நிலையில் தற்போது 7 வெள்ளி வரை விலை நிர்ணயம் செய்யப்படுகின்றது.

பூவன், செவ்வாழை, பச்சைப்பழம் மற்றும் கற்பூர வள்ளி ஆகிய பழங்களின் விலையில் பெருமளவு உயர்ந்துள்ளது.

மலேசிய செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

 Facebook

Telegram