“தோல்வியில் துவண்டுவிடவில்லை” – சமையல் கலைஞராக மாறிய விமான கேப்டன்.!

Captain Azrin
Image tweeted by Leory Group

வேலை இழந்த விரக்தியில் சோர்ந்து விடாமல், மலேசிய விமான கேப்டன் ஒருவர் தற்போது சமையல் கலைஞராக உருவெடுத்துள்ளார். (Captain Azrin)

மலிண்டோ விமான சேவை நிறுவனம் (Captain Azrin) அண்மையில் தங்களுடைய பணியாளர்கள் 2000 பேரை பணி நீக்கம் செய்ய உள்ளதாக அறிவித்தது.

தமிழ் மலர் என்ற மலேசிய செய்தி நிறுவனம் இது குறித்த செய்தி ஒன்றை அண்மையில் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. (Captain Azrin).

8 ஆண்டுகளுக்கு முன்பு மலேசியாவின் சிலாங்கூர் பகுதியை தலைமையகமாக கொண்டு நிறுவப்பட்டது தான் Malindo Air விமான சேவை நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.

“தொடர்ந்து முன்னிலையில் Sabah”

மலேசியாவின் ‘Mal’ இந்தோனேசியாவின் ‘indo’ என்பதை இணைத்தே “மலிண்டோ” என்ற பேரை அந்த நிறுவனம் பெற்றது.

கடந்த 8 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வரும் இந்த நிறுவனமும் பிற விமான சேவை நிறுவனத்தை போல தற்போது பெரும் இழப்பை சந்தித்து வருகின்றது.

சில விமான சேவை நிறுவன பணியாளர்கள், வேலை இழந்த சோகத்தில் செய்வதறியாது தற்கொலை செய்துகொண்ட சம்பவங்களும் மலேசியாவில் நடந்தேறியது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பலருக்கும் உத்வேகம் அளிக்கும் விதமாக செயல்பட்டு வருகின்றார் விமான கேப்டன் அஸ்ரின் முஹமது சாவாவி.

வேலை இழந்த கேப்டன் அஸ்ரின் சோர்ந்துவிடவில்லை. மாறாக கோலாலம்பூர் சுற்றுப்பகுதியில் சிற்றுண்டி கடை ஒன்றை தொடங்கி தானே சமைத்து வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகின்றார்.

வழக்கம்போல காலையில் தனது விமான கேப்டன் சீருடையுடன் புறப்படும் அஸ்ரின், தனி ஆளாக அந்த சிறிய சிற்றுண்டி சாலையை நடத்தி வருகின்றார்.

விமான கேப்டன் உடையுடன் அவர் வலம்வருவது பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. பலரும் ஆர்வமாக இவருடைய கடையில் வந்து உணவருந்தி செல்கின்றனர்.

மலேசிய செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

 Facebook

Telegram