“புதிய நம்பிக்கை” – தொடர்ந்து உச்சத்தில் குணமடைவோர் எண்ணிக்கை.!

Corona Vaccine Doses
Image Tweeted by BERNAMA

மலேசியாவில் இன்று கொரோனாவில் இருந்து மீண்டோரின் எண்ணிக்கை மீண்டும் புதிய உச்சமாக 4521 பேர் என்ற அளவை எட்டியுள்ளது. (Malaysia Corona Cases)

மேலும் புதிதாக இன்று ஒரே நாளில் 2176 பேர் கொரோனா காரணமாக மலேசியாவில் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. (Malaysia Corona Cases)

600 சுகாதார மையங்கள் – நாளொன்றுக்கு 1 லட்சம் தடுப்பூசிகள்.!

தொடர்ந்து சிலாங்கூர் பகுதி தான் அதிக அளவில் கொரோனா தொற்று உள்ள இடமாக திகழ்ந்து வருகின்றது. இன்று அங்கு 910 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் இன்று மலேசியாவில் 10 பேர் கொரோனா காரணமாக இறந்துள்ள நிலையில், இதுவரை 975 பேர் கொரோனா காரணமாக இறந்துள்ளனர்.

மலேசியாவில் கொரோனா காரணமாக கடந்த 2020ம் ஆண்டு மார்ச் மாதம் 18ம் தேதி லாக் டவுன் அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

கொரோனா பரவ தொடங்கி, இதுவரை மலேசியாவில் 2,66,445 பேர் இந்த நோயின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் தற்போது கொரோனாவில் இருந்து மீண்டு வருவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதுவரை 2,18,355 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வந்துள்ளனர்.

இதனால் தற்போது மலேசியாவில் புதிய நம்பிக்கை ஒன்று பிறந்துள்ளது பெரும் மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது.

மேலும் விரைவில் கொரோனா தடுப்பூசி மலேசியாவில் 600 சுகாதார மையங்கள் மூலம் வழங்கப்பட உள்ளது.

மலேசியாவில் வசிக்கும் பிற நாடுகளை சேர்ந்த பிரஜைகளுக்கு இந்த கொரோனா தடுப்பூசி இலவசமாக அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மலேசிய செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

 Facebook

Telegram