600 சுகாதார மையங்கள் – நாளொன்றுக்கு 1 லட்சம் தடுப்பூசிகள்.!

Corona Vaccine Awareness
Twitter Image

நாளொன்றுக்கு சுமார் 1 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி அளிக்க மலேசிய அரசு முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. (one lakh vaccine)

மலேசியா முழுவதும் சுமார் 600 மையங்கள் அமைத்து அதன் இந்த தடுப்பூசிகளை வழங்க தற்போது அரசு முடிவெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. (one lakh vaccine)

கடந்த ஆண்டு இறுதியில், 2021ம் ஆண்டில் 60 லட்சத்திற்கும் அதிகமான மலேசியர்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கப்படும் என்று மலேசிய பிரதமர் மக்களவையில் அறிவித்தார்.

“ஸ்கேட்டிங் இளவரசி” ஸ்ரீ அபிராமி – லட்சக்கணக்கில் குவிந்த நிதி.!

சீன அரசுடன் நடந்துள்ள ஒப்பந்தத்தில் அடிப்படையில் இந்த தடுப்பூசி வழங்கப்படும் என்றும். இதற்கான சோதனை நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

கடந்த 2020ம் ஆண்டு நவம்பர் 24ம் தேதி சீன அரசுடன் இதற்கான ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. மேலும் மலேசியர்கள் அனைவருக்கும் இலவசமாக இந்த தடுப்பூசி போடப்படும் என்றார் பிரதமர்.

சுமார் 300 கோடி வெள்ளி இந்த இலவச தடுப்பூசி வழங்க அரசு நிதி ஒதுக்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது என்று மலேசிய செய்திநிறுவனமான தமிழ் மலர் செய்தி வெளியிட்டுள்ளது.

ஆனால் தடுப்பூசி அளிப்பது என்பது மிகவும் கடினமான வேலை என்று மருத்துவ நிபுணர் டாக்டர் தாரணி லோகநாதன் அப்போது கூறினார்.

தடுப்பு மருந்தினை முதலில் கொரோனா தடுப்பு களப்பணியாளர்கள், ஆபத்தை நிலையில் உள்ளோர், வயது மிகுந்தோர் ஆகியோருக்கு தான் முதலில் வழங்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

மலேசிய செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

 Facebook

Telegram