“கொச்சி முதல் கோலாலம்பூர் வரை” – அனைத்து வியாழக்கிழமைகளில் சேவை.?

Kochi Kuala Lampur
Image Tweeted by Air India Express

மலேசிய தலைநகர் கோலாலம்பூருக்கு கேரளாவின் கொச்சியில் இருந்தும் வந்தே பாரத் விமானங்களை இயக்க உள்ளது. ஜனவரியில் அனைத்து வியாழக்கிழமைகளில் இது இயங்கும். (Kochi Kuala Lampur)

மேலும், மீண்டும் கோலாலம்பூரில் இருந்து கொச்சிக்கு பெங்களூரு மார்கமாக விமானங்கள் இயக்கப்படும் என்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் அறிவித்துள்ளது. (Kochi Kuala Lampur)

மலேசியா – சிங்கப்பூர் : அதிவேக ரயில் திட்டம் ரத்து.!

நேற்று ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் ஜனவரி 2021-க்கான மலேசியா – தமிழ்நாட்டை இணைக்கும் விமானங்களின் பட்டியலை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தை பொறுத்தவரை திருச்சி மற்றும் சென்னை ஆகிய இரு நகரங்களுக்கு இந்த சேவை வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

ஜனவரி 04 2021 தொடங்கி ஜனவரி 25 2021 வரை அனைத்து திங்கள் மற்றும் இரண்டு புதன்கிழமைகளில் திருச்சிக்கு விமான சேவை அளிக்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஜனவரி 7ம் தேதி 2021 தொடங்கி 28 ஜனவரி 2021 வரை அனைத்து செவ்வாய் கிழமைகளிலும் விமான சேவை சென்னைக்கு வழங்கப்பட உள்ளது.

இதற்கான முன்பதிவு தொடங்கிவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் ஜனவரி 2021-ல் அனைத்து வியாழக்கிழமைகளில் கொச்சி முதல் கோலாலம்பூருக்கும் மீண்டும் கொச்சிக்கு விமானங்கள் இயக்கப்படும் என்று ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் அறிவித்துள்ளது.

மலேசிய செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

 Facebook

Telegram