சிங்கப்பூர் மற்றும் மலேசிய தலைநகர் கோலாலம்பூர் இடையியேயான அதிவேக ரயில் திட்டம் ரத்து செய்யப்படுவதாக இரு நாடுகளும் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. (High Speed Train)
கடந்த 2018ம் ஆண்டு பேச்சுவார்தையுடன் தொடங்கிய இந்த திட்டம் தற்போது முழுமையாக ரத்து செய்யப்படுவதாக இரு நாடுகளும் அறிவித்துள்ளது. (High Speed Train)
“சர்வதேச விமான பயணம்” – ஜனவரி 31 – 2021 வரை தடை நீட்டிப்பு.?
கொரோனா பரவல் காரணமாக ஏற்பட்ட பொருளாதார சரிவே இந்த அதிவேக ரயில் திட்டத்தை ரத்து செய்ய காரணம் என்று மலேசிய பிரதமர் முஹிதீன் தெரிவித்துள்ளார்.
உலக அளவில் பொருளாதாரத்தை இந்த கொரோனா பெருமளவில் சரிந்துள்ளது என்பது இந்த நிகழ்வில் மூலம் நிரூபணமாகி உள்ளது.
மேலும், ஏற்கனவே மலேசியா, சிங்கப்பூர் இடையேயான ஆர்.டி.எஸ் ரயில் திட்டம் அமலில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்வு குறித்து ஆண்டனி லோக் தனது முகப்புத்தகத்தில் ஒரு பதிவினை அளித்தார். அந்த பதிவில், தாம் சிங்கப்பூர் போக்குவரத்து அமைச்சர் கோ பூன் வானைச் சந்தித்ததாகவும்.
அந்த சந்திப்பில் சிங்கப்பூருக்கும் ஜோஹோர் பருவுக்கும் இடையிலான ரயில் இணைப்புத் திட்டத்தின் முன்னேற்றத்தை பற்றியும் விவாதித்ததாக அவர் கூறினார்.
மேலும் தானும் அமைச்சர் கோ பூனும் பரிமாறிய கருத்துக்கள் மிகவும் பயனுள்ளதாக இருந்ததாக அவர் முன்னர் தெரிவித்தார்.
இருப்பினும் பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் துவங்கப்பட்ட அதிவேக ரயில் திட்டம் தற்போது முற்றிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
மலேசிய செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.
* Telegram