“கோலாலம்பூர் to தமிழ்நாடு” – டிசம்பர் மாத விமானப் பட்டியல் வெளியீடு.!

Vande Bharath Flights
Image tweeted by Air India Express

கோலாலம்பூர் முதல் தமிழகம் செல்லும் வந்தே பாரத் விமானங்களின் பட்டியல் தற்போது வெளியாகி உள்ளது. டிசம்பர் மாதத்திற்கான இந்த பட்டியல் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. (KL to TN Flights)

பிற நாடுகளில் இருந்து இந்தியாவிற்கும், இந்தியாவில் இருந்து பிற நாடுகளுக்கும் மக்களை கொண்டு சேர்ப்பதில் முக்கிய பங்கை வகிக்கின்றது வந்தே பாரத். (KL to TN Flights)

“அடுத்த ஆண்டு முதல் மதுபானம் விற்க்கத்தடை.?”

தமிழகத்தை பொறுத்தவரை திருச்சி மற்றும் சென்னை ஆகிய இரு நகரங்களுக்கு இந்த சேவை வழங்கப்பட்டு வருகின்றது.

டிசம்பர் 02 2020 தொடங்கி டிசம்பர் 30 2020 வரை அனைத்து புதன் கிழமைகளிலும் திருச்சிக்கு இந்த விமான சேவை அளிக்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் டிசம்பர் 3ம் தேதி 2020 தொடங்கி 17 டிசம்பர் 2020 வரை அனைத்து வியாழக்கிழமைகளில் இந்த விமான சேவை சென்னைக்கு வழங்கப்பட உள்ளது.

இதற்கான முன்பதிவு தொடங்கிவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் Air India Express நிறுவனம் கோலாலம்பூர் செல்லும் பயணிகளுக்கு ஒரு முக்கிய அறிவிப்பினை அண்மையில் வெளியிட்டது. அந்த நிறுவனம் வெளியிட்ட ட்விட்டர் பதிவில் பின்வருமாறு தெரிவித்துள்ளது. (KL to Tamilnadu)

KL to Tamilnadu – டிசம்பர் மாத விமானப் பட்டியல்

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனமானது “புறப்படும்-சேருமிடங்களுக்கு” இடையில் சேவை வழங்கும் “Point To Point” வகை சேவை அளித்துவரும் நிறுவனமாகும். சேருமிடத்திலிருந்து இணைப்பு விமானசேவைக்கு இது பொறுப்பாகாது.

முன்பு கோலாலம்பூர் வழியாக ஹாங்காங், தைவான் உள்பட மலேசிய அரசு அனுமதித்த குறிப்பிட்ட விமானநிலையங்களுக்கு.

நிபந்தனைகளுடன் கூடிய தனியான உறுதிப்படுத்தப்பட்ட பயணச்சீட்டு வைத்திருந்தவர்களுக்கு பயணம் செய்ய ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் அனுமதித்தது.

ஆனால் இப்போது கோலாலம்பூர் வழியான எந்தவொரு இணைப்பு விமானசேவைக்கும் அனுமதி இல்லை.

மலேசிய செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

 Facebook

Telegram