“அடுத்த ஆண்டு முதல் மதுபானம் விற்க்கத்தடை.?” – அமலுக்கு வரும் புதிய விதி.!

Ban for Alchol
Image tweeted by EdgeProp Malaysia

மலேசியாவில் மளிகை கடைகள், பலசரக்கு கடைகள், உயர்ரக பொருட்கள் விற்கும் வளாகங்கள் மற்றும் சீன மருந்தகங்களில் மதுபானங்கள் விற்க தடைவிதிக்கப்பட உள்ளது. (Ban for Alchol)

இந்த தடை அடுத்த ஆண்டு (2021) அக்டோபர் மாதம் முதல் அமலுக்கு வரும் என்று ஒரு தகவல் வெளியாகி உள்ளது. (Ban for Alchol)

“நிலைமை சீரானால் தடை நீக்கப்படலாம்”

ரெட்டிட் செய்தி நிறுவனம் வெளியிட்ட தகவலின் அடிப்படையில் “கோலாலம்பூரில் உள்ள மளிகைக் கடைகள், கன்வீனியன்ஸ் ஸ்டோர்கள் மற்றும் சீன மருந்தகங்கள்.

ஆகியவை அடுத்த ஆண்டு அக்டோபர் 1ம் தேதி முதல் கடின மதுபானங்களை விற்க அனுமதிக்கப்படாது.”

பப்புகள், மதுபான பார்கள், ஓய்வறைகள் மற்றும் உணவகங்கள் காலை 10 மணி முதல் நள்ளிரவு வரை மதுபானங்களை விற்கலாம்.

மேலும் காவல் நிலையம், வழிபாட்டு தளங்கள், கல்விக்கூடங்கள் மற்றும் மருத்துவமனைகள் ஆகிய இடங்களின் முன்பு இந்த வர்த்தக கடைகள் இருக்க கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தற்போது இருந்தே இந்த விதிக்கு பல அங்காடிகளில் இருந்து பெரும் அளவு எதிர்ப்பு வருவதாக தகவல் வெளியாகி வருகின்றது.

இந்த தடையினால் பெரிய அளவில் பொருளாதாரம் நலிவடையும் என்றும் வர்த்தகர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதுபான தடை பல அரபு நாடுகளில் தற்போது அமலில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் மலேசியாவில் சில தடைகள் மட்டுமே விதிக்கப்பட உள்ளது.

மலேசிய செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

 Facebook

Telegram