“KL முதல் சென்னை, கொச்சி, பெங்களூரூ வரை” – தாயகம் சென்ற இந்தியர்கள்.!

KL Chennai Flight
Image tweeted India in Malaysia

மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து தமிழகத்தின் தலைநகர் சென்னை மற்றும் கொச்சி, பெங்களூரூ ஆகிய நகரங்களுக்கு இரண்டு விமானங்கள் பறந்தன. (KL Chennai Flight)

நேற்று கோலாலம்பூரில் இருந்து வந்தே பாரத் திட்டத்தின் கீழ் செயல்படும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் மூலம் 355 பயணிகள் தாயகம் சென்றனர். (KL Chennai Flight)

“இதுவே அரசு எதிர்கொள்ளும் குழப்பம்” – நூர் ஹிஷாம் அப்துல்லா.!

மலேசியாவில் தற்போது மூன்றாம் அலை கொரோனா நடப்பில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் மலேசிய அரசு மீகவும் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

பிற நாடுகளில் இருந்து மலேசியா வருவோர்க்கும், மலேசியாவில் இருந்து பிற நாடுகளுக்கு செல்வோர்க்கும் தகுந்த ஏற்பாடுகளை மலேசிய அரசு செய்துள்ளது.

இந்த வகையில் மலேசிய அரசின் உதவியோடு இங்கு செயல்படும் இந்திய உயர் கமிஷன், மலேசியாவில் இருக்கும் தங்களுடைய மக்களை தாயகம் அனுப்பி வருகின்றது.

சென்ற மாதத்தை விட அதிக அளவில் தமிழகத்திற்கு கோலாலம்பூரில் இருந்து விமானங்கள் இயக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

ஆனால் விரைந்து மக்கள் பயன்பாட்டிற்கு பிற விமான சேவைகளையும் திறக்க வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாக உள்ளது.

வந்தே பாரத் திட்டத்தின் கீழ் இயங்கும் விமானங்களில், அதிக அளவில் விமான கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்பது வெகு நாட்களாக உள்ள குற்றச்சாட்டாகும்.

மலேசிய செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

 Facebook

Telegram