“இதுவே அரசு எதிர்கொள்ளும் குழப்பம்” – நூர் ஹிஷாம் அப்துல்லா.!

Corona Deaths Malaysia
Image tweeted by KKMalaysia

உலகில் பல லட்சம் மக்களை பலி வாங்கியுள்ளது இந்த கொரோனா, இந்நிலையில் ஒரு நாட்டின் அரசு, சுகாதாரம் மற்றும் பொருளாதாரம் ஆகிய இரண்டிற்கும் முன்னுரிமை தரவேண்டியுள்ளது. (Malaysia Tamil News)

இந்த கருத்தினை மலேசிய அரசின் சுகாதார அமைச்சகத்தின் இயக்குநர் ஜெனரல் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்துள்ளார். (Malaysia Tamil News)

“கோலாலம்பூர் to திருச்சி மற்றும் டெல்லி” – தாயகம் வந்த 356 பயணிகள்”

அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில் “சுகாதாரம் மற்றும் பொருளாதாரம் இடையே சரியான சமநிலையை ஏற்படுத்துவது மிகவும் கடினம்.”

“மேலும் இதில் ஒன்றை ஆதரிக்கவும், மற்றொன்றுக்கு சேதம் விளைவிக்கும் அபாயமும் உள்ளது. இது அரசாங்கங்கள் எதிர்கொள்ளும் மிகப்பெரிய குழப்பம்.” என்றார் அவர்.

“வைரஸுடன் சேர்ந்து வாழ நாம் கற்றுக்கொள்ள வேண்டும்” என்றார் அவர். மக்களுக்கு சுகாதாரம் மற்றும் பொருளாதாரத்தை சம நிலையில் பேணிக்காப்பதே ஒரே அரசின் தலையாய கடமை என்றார் அவர்.

இதுபோன்ற பேரிடர் காலங்களில் ஒரு அரசு ஒருதலை பட்சமாக செயல்பட முடியாது என்பது மக்களும் உணர்ந்து தங்களுடைய ஒத்துழைப்பை நல்க வேண்டும்.

மக்கள் SOP-க்களை முறையாக கடைபிடித்தாலே அரசு தங்களுடைய பணிகளை எளிதில் செய்யமுடியும் என்பது பலரின் கருத்து.

மலேசிய செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

 Facebook

Telegram