கெடா அரசு அம்மாநிலத்தில் உள்ள 85 ஆண்டுகள் பழமையான தமிழ் பள்ளிக்கு நிரந்திர நிலப்பட்டா வழங்காதது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது. (Kedah Tamil School)
பினாங்கு துணை முதல்வரும் பேராசிரியருமான ராமசாமி அவர்கள் இந்த குற்றச்சாட்டினை தற்போது முன்வைத்துள்ளார். (Kedah Tamil School)
“பி.கே.பி-யை இனி செயல்படுத்த தேவையில்லை” – டாக்டர் மேடலைன் பெர்மா.!
உலகம் எங்கும் பரவியுள்ள நாடுகளில் பல இடங்களில் தமிழர்களின் பங்கீடு என்பது அதிகம். இதற்கு மலேசியாவும் விதிவிலக்கு அல்ல.
மலேசியாவை பொறுத்தவரை தமிழர்களின் பாரம்பரியம் என்பது 200 ஆண்டுகள் கண்டது நிற்கும் ஒன்று. தோட்டத்தொழில் அவர்கள் பங்கு அதிகம்.
இந்நிலையில் கெடா அரசு அம்மாநிலத்தில் உள்ள 85 ஆண்டுகள் பழமையான தமிழ் பள்ளி ஒன்றுக்கு நிரந்திர நிலப்பட்டா வழங்காமல் உள்ளது.
சுங்கை ஊலார் தோட்டத் தமிழ்ப்பள்ளிக்கு, அம்மாநில அரசு மூன்று ஆண்டுகளுக்கு வாடைக்கு விடுவதற்கு பதிலாக நிரந்திர நிலப்பட்டா வழங்கலாம் என்றார் ராமசாமி.
இதுஒருபுரம் இருக்க வரவிருக்கும் 2021ம் ஆண்டிற்கான பட்ஜெட், கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது.
பெரிக்காத்தான் நேஷனல் அரசின் தலைமையில் இந்த பட்ஜெட் அறிவிக்கப்பட்டது.
இந்த பட்ஜெட் அறிவிப்பு குறித்து ஒரு முக்கிய கேள்வியை அப்போது முன்வைத்தார் பத்துகாஜா பகுதியில் நாடாளுமன்ற உறுப்பினர்.
திரு. சிவகுமார் அவர்கள் அப்போது வெளியிட்ட அறிக்கையில். அறிவிக்கப்பட்டுள்ள பட்ஜெட்டில் தமிழ் மற்றும் சீன பள்ளிகளுக்கான தனிப்பட்ட பட்ஜெட் அறிவிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்தார்.
மலேசிய செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.
* Telegram